PLAY PODCASTS
Solratha sollitom| Hello Vikatan

Solratha sollitom| Hello Vikatan

346 episodes — Page 1 of 7

எகிறும் அண்ணாமலையிடம் அடிபணிகிறதா அ.தி.மு.க? | Solratha Sollitom-21/09/2023

* கடன் தவணையை உரிய நேரத்தில் செலுத்தாதவர்களுக்கு வீட்டிற்கே சென்று சாக்லெட் கொடுத்து நினைவூட்ட உள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா திட்டமிட்டு இருக்கிறது.* கூலியாக மாறிய ராகுல்: டில்லி ரயில் நிலையத்தில் பெட்டி தூக்கினார்...* காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு ஒரு முறை கூடி சூழலை ஆராய்ந்து வருகிறது என்று கூறிய நீதிபதிகள் காவிரியில் இருந்து விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீரை திறக்க உத்தரவிட்ட மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகள் மற்றும் பரிந்துரைகளை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். * நீட் முதுநிலை தேர்வில் தகுதி மதிப்பெண் (கட் ஆப்) பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்* டிடிஎப் வாசனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு * " தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி அமைக்க ஆக்ரோஷ அரசியல்தான் செய்வேன் " - அண்ணாமலை ..."அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பிரச்சினை இல்லை" - செல்லூர் ராஜூ* * Khalistan: NIA-வால் தேடப்படும் குற்றவாளி; கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் ஆயுதப்போராளி சுட்டுக் கொலை!-Solratha Sollitom.

Sep 21, 202322 min

மோடியின் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடகம்தானா? | Solratha Sollitom-20/09/2023

Vote us : https://bit.ly/3ZgMECQ | HelloVikatan Podcast-கள் Hubhopper நடத்தும் 'சிறந்த Podcastகள் 2023' விருதுப் பட்டியலில் 8 பிரிவுகளில் Nominate ஆகி உள்ளது. விகடன் Podcastகளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். * "மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவில் ஓபிசி பிரிவினரையும் சேர்க்க வேண்டும்" என்றார் சோனியா.* மகளிர் இட ஒதுக்கீடு குறித்து ஸ்டாலின் அறிக்கை* "பா.ஜ., குறித்து விமர்சிக்காதீங்க": நிர்வாகிகளுக்கு அதிமுக அறிவுறுத்தல்...* நேற்று புதிய நாடாளுமன்றத்தில் நடந்த முதல் கூட்டத்தின்போது தங்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சாசன புத்தகத்தின் முன்னுரையில் `மதசார்பற்ற', `சோசியலிச' போன்ற வார்த்தைகள் நீக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம்சாட்டியிருக்கிறார்.* சவர்மா பிரச்னை* கர்நாடக அரசு இந்தியா மீது குற்றச்சாட்டு-Solratha Sollitom

Sep 20, 202320 min

அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிவு : நிஜமா, நாடகமா? | Solratha Sollitom-19/09/2023

Vote us : https://bit.ly/3ZgMECQ | HelloVikatan Podcast-கள் Hubhopper நடத்தும் 'சிறந்த Podcastகள் 2023' விருதுப் பட்டியலில் 8 பிரிவுகளில் Nominate ஆகி உள்ளது. விகடன் Podcastகளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்.* அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி முறிந்தது* மகளிருக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் * இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவது என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி முடிவு * சீமான் பிரச்னை-Solratha Sollitom

Sep 19, 202327 min

அ.தி.மு.க -பா.ஜ.க கூட்டணியில் மீண்டும் உரசலா? | Solratha Sollitom - 16/09/2023

*ஒடிடி பரிந்துரை*புத்தகப் பரிந்துரை*அரசியல் அலசல்Vote us : https://bit.ly/3ZgMECQ | HelloVikatan Podcast-கள் Hubhopper நடத்தும் 'சிறந்த Podcastகள் 2023' விருதுப் பட்டியலில் 8 பிரிவுகளில் Nominate ஆகி உள்ளது. விகடன் Podcastகளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். -Solratha Sollitom

Sep 16, 202326 min

பி.ஜே.பியில் சேரச்சொல்லி செந்தில்பாலாஜிக்கு அழுத்தமா? | Solratha Sollitom - 15/09/2023

* 1 கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா 1,000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். * வேலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது , காவிரியில் நாம் தண்ணீர் கேட்பது யாசகம் இல்லை. * சீமானின் ஆவேசப்பேச்சு.* நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது வரும் 20 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.* பா.ஜ.க.வில் சேர்கிறீர்களா என்று அமலாக்கத்துறை கேட்டதாக கபில்சிபில் வாதம்* சனாதனம் - உதயநிதி வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புHelloVikatan Podcast-கள் Hubhopper நடத்தும் 'சிறந்த Podcastகள் 2023' விருதுப் பட்டியலில் 8 பிரிவுகளில் Nominate ஆகி உள்ளது. விகடன் Podcastகளுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். Vote us : https://bit.ly/3ZgMECQ -Solratha Sollitom

Sep 15, 202319 min

அமித்ஷா மீது பாயும் உதயநிதி! | Solratha Sollitom - 14/09/2023

* RBVS மணியன் கைது. * பெண்களும் இனி அர்ச்சகர்கள்* நாடு முழுவதும் உள்ள அனைத்து 'சனாதனிகளும்', நம் நாட்டை நேசிக்கும் மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். - மோடி* இந்தூரில் உள்ள கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், “இந்தியாவில் சிலர் தொடர்ந்து சனாதனத்தை அவமதித்து வருகின்றனர். இது துரதிர்ஷ்டவசமானது. நாட்டின் தேசிய மதமாக உள்ள சனாதன தர்மத்தின் நிலைத்தன்மையை யாரும் கேள்விகேட்க முடியாது.* பொன்முடி வழக்கின் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. .* அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- "இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது - பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது" என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பொழிந்துள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்துதமிழ்நாட்டில் தமிழ் - கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது?. நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.* 2வது முறையாக சீமானுக்கு சம்மன்...* டில்லி சென்றார் பழனிசாமி...* கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் என்னிடம் ரூ.2,000 கோடி பேரம் பேசி வருகின்றனர். என்ன ஆனாலும் நான் அதிகாரிகளிடம் உண்மையைச் சொல்லுவேன்” - தனபால்.* நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலை அரசு வெளியிட்டது.-Solratha Sollitom

Sep 14, 202320 min

தீவிரமாகும் காவிரி பிரச்னை - என்ன செய்யப்போகிறார் ஸ்டாலின்? | Solratha Sollitom-13/09/2023

* புதிய நாடாளுமன்றத்தின் ஊழியர்களுக்கு, புதிய சீருடை வழங்கப்பட்டிருக்கிறது. ஆண் ஊழியர்களுக்கு இளஞ்சிவப்பு நிற சட்டையும், காக்கி நிற பேன்ட்டும் சீருடையாக வழங்கப்பட்டிருக்கிறது. சட்டை முழுவதும் தாமரை படங்கள் இடம்பெற்றுள்ளன.* ஹரியானா கலவரம், கொலை வழக்குகளில் தொடர்புடைய பசு பாதுகாவலர் மோனு மானேஸர் நேற்று கைது செய்யப்பட்டார்.* சிலை வைத்து அதை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கூறவில்லை. இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பலன்? விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.* "எந்த ஒரு பிரச்சினையையும் உள்நோக்கத்தோடு திரித்து, ஊடகங்களின் துணையோடு பூதாகரமாக ஆக்கி, நாட்டின் அசலான பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்து, மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதில் பாஜகவினர் வல்லவர்கள் என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். பாஜகவின் ஊழல், மதவாத, எதேச்சாதிகார முகத்தை அம்பலப்படுத்தி, நடக்க இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியைத் தோற்கடிப்பதன் மூலம், நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது என்ற உன்னதமான இலக்கில் வெல்ல அர்ப்பணிப்போடு செயல்படுவோம். எந்த கவனச் சிதறலுக்கும் இடமளித்துவிடக் கூடாது" என்று திமுகவினருக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.* பார்வையாளர்கள் எவ்வளவு விலை கொடுத்து டிக்கெட் வாங்கியிருந்தாலும் அந்த தொகை திருப்பியளிக்கப்படும் என்று ’மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனத்தின் சிஇஓ ஹேமந்த் ராஜா தெரிவித்துள்ளார்.* காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிகள் கூடி ஆலோசித்தனர். இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ."காவிரி நீர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தை நாடுவதுதான் கடைசி முடிவு. இந்த வழக்கில் வரும் 21-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் என்ன முடிவு வருகிறது என்பதை பார்த்துவிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டலாம். அதற்கு முன்பாகவே அந்தக் கூட்டத்தைக் கூட்ட வேண்டிய தேவை இல்லை" என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.-Solratha Sollitom

Sep 13, 202318 min

வன்முறையைத் தூண்டும் மத்திய அமைச்சர் - கண்டிப்பாரா மோடி? | Solratha Sollitom-12/09/2023

* கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டிகளில் இந்திய அணி ஆடியபோது ஒவ்வொரு போட்டியின்போதும் அணியின் பயிற்சியாளர் ஐகோர் ஸ்டைமேக், ஜோதிடர் பூபேஷ் சர்மாவை கலந்தாலோசித்த விவகாரத்தில் மேலும் பல விஷயங்கள் வெளியாகியுள்ளன. * சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை வெட்டுவோம்; கண்ணைப் பிடுங்குவோம் - மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்* உடன்கட்டை ஏறுவதை நியாயப்படுத்திய அண்ணாமலை* டெல்லியில் காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு இன்று (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது. இந்த கூட்டத்தின்போது, தமிழ்நாட்டிற்கு திறந்து விட தண்ணீர் இல்லை என்ற கருத்தை வலியுறுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. * காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் குறித்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியதாவது:- காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் தமிழக அரசு தேவையற்ற தொல்லை தருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்குவதில் பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு காலதாமதம் செய்கிறது. * பட்டியலினப் பெண் சமைத்த உணவைச் சாப்பிட மறுத்த பள்ளிக்குச் சென்ற கனிமொழி. * மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது : தற்போது ஜி-20 உச்சி மாநாடு முடிந்து விட்டது. இனியாவது மோடி அரசு உள்நாட்டு பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். * மீண்டும் அமலாக்கத்துறை சோதனை* எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு.-Solratha Sollitom

Sep 12, 202325 min

பா.ஜ.கவைச் சீண்டிய உதயநிதி...அத்துமீறிய ஹெச்.ராஜா! | Solratha Sollitom-11/09/2023

* அவதூறாகப் பேசிய ஹெச்.ராஜா* ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பிரச்னை* சனாதனம் குறித்து விவாதிக்க ஸ்டாலினுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அழைப்பு* தூத்துக்குடி அருகே பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைக்கும் உணவை தங்கள் குழந்தைகளுக்கு வழங்கக் கூடாது என பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக சொல்லப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.* திருப்பத்தூர் மாவட்டத்தில் காணாமல்போன பட்டியலின ஊராட்சித்தலைவி* ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கைது* தியாகி இமானுவேல் சேகரனின் பிறந்தநாள் நூற்றாண்டை ஒட்டி நகராட்சி இடத்தில் 3 கோடி ரூபாயில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.-Solratha Sollitom

Sep 11, 202325 min

தேசிய அரசியலில் தி.மு.க.வின் இடம் என்ன? | Solratha Sollitom-09/09/2022

* புத்தகப்பரிந்துரை* ஓ.டி.டி பரிந்துரை* தேசிய அரசியலும் திமுகவும் - அலசல்-Solratha Sollitom

Sep 9, 202328 min

எடப்பாடிக்கும் சிக்கல், ஸ்டாலினுக்கும் சிக்கல்! | Solratha Sollitom-08/09/2023

* "இமாச்சலப்பிரதேசத்தில் இறைச்சி சாப்பிடுவதால்தான் இயற்கைப்பேரிடர்கள்" - ஐ.ஐ..டி இயக்குநர்* இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து காலமானார்...!* ஐ.பெரியசாமி, வளர்மதி வழக்குகள் மறுவிசாரணை* சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்ய இன்று காலையில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி, மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார்.* சாத்தான்குளம் வழக்கு - சப் இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி* பல்லடம் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர் சுட்டு பிடிக்கப்பட்டார்* மோடி பிறந்த நாளையொட்டி 73 ஜோடிகளுக்குத் திருமணம் - அண்ணாமலை அறிவிப்பு* வரும் மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் - பாஜக கூட்டணிக்கான புரிதல் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வரும் மூத்த பாஜக தலைவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.* "இனி இந்தியாவை பாரத் என்றே எழுத வேண்டும்" - மோகன் பகவத்.-Solratha Sollitom

Sep 8, 202323 min

மோடிக்கும் ஆளுநருக்கும் செக் வைத்த ஸ்டாலின்! | Solratha Sollitom-07/09/2023

* சனாதன எதிர்ப்பு குறித்து ஸ்டாலின் விரிவான அறிக்கை* உதயநிதியை அறைந்தால் 10 லட்சம் என்று ஆந்திராவைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்பான ஜன ஜாகரணா சமிதி தெரிவித்துள்ளது.* இந்திய ஒற்றுமை யாத்திரையின் ஓராண்டு நிறைவையொட்டி ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், ஒரு வீடியோ வெளியிட்டு தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், 'இந்திய ஒற்றுமை யாத்திரையின் அன்பை நோக்கிய நடைபயணம் நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளமாக மாறியுள்ளது. இந்த பயணம் தொடரும்.. வெறுப்பு மறையும் வரை, இந்தியா ஒன்று சேரும் வரை. இது என்னுடைய வாக்குறுதி' என ராகுல் குறிப்பிட்டுள்ளார்.* காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இன்று கூறும்போது, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யாது. அப்படி செய்யும்போது, பா.ஜ.க. ஒரு பக்க முடிவை எடுத்து விடும் என கூறியுள்ளார். முக்கிய விவகாரங்கள் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும். அதனை நாங்கள் முன்வைப்போம் என்று பேசியுள்ளார். * "பா.ஜ.க -அ.தி.மு.க உறவு கணவன் - மனைவி உறவு போன்றது. அதைப்பற்றி தினமும் விளக்க வேண்டியதில்லை" - ஹெச்.ராஜா* மூகத்தில் பாகுபாடுகள் இருக்கும் வரை இடஒதுக்கீடு முறைக்கு ஆர்.எஸ்.எஸ்.இன் ஆதரவு தொடரும் என்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.-Solratha Sollitom

Sep 7, 202320 min

உதயநிதிக்கு ஸ்பீடு பிரேக்கர் போடுமா இந்தியா கூட்டணி? | Solratha Sollitom - 06/09/2023

* திருச்சூரை சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரை சென்னையில் கைது செய்தனர் என்.ஐ.ஏ அதிகாரிகள். கைதான ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபிலிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. * பல்லடம் கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது.* காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த நிலையில், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு வரும் 21-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. * இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் முதல் கூட்டம் 13-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. * 'ஜி-20 இந்தியா' செயலியை பதிவிறக்கம் செய்ய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். * நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வருகிற 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடர்பாக பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு விவாதிக்க வேண்டும். விவாதப்பொருள் பட்டியல் தரவில்லை; அதில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையும் சேர்க்க வேண்டும். வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரம், விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து சிறப்பு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார். மேலும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மணிப்பூர் வன்முறை குறித்தும் பேச வேண்டும் என சோனியா காந்தி கோரிக்கை வைத்துள்ளார். சிறப்பு கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் கட்சிகளுக்கு இதுவரை வழங்கப்படவில்லை என கடிதத்தில் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.* சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. * சேவாக்கின் பதிவை மேற்கோள் காட்டி நடிகர் விஷ்ணு விஷால் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், "மிகுந்த மரியாதையுடன் கேட்கிறேன்... இத்தனை ஆண்டுகளாக இந்தியா என்ற பெயர் உங்களுக்கு பெருமை தரவில்லையா?" என்று பதிவிட்டுள்ளார். அவரது பதிவை ரசிகர்கள் ரீட்வீட் செய்து வருகின்றனர்.* பாரதம் என்ற குடும்பமாக வாழ்வோம்: கவர்னரின் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து...* சனாதனம் குறித்த கருத்துக்கு ஒன்றிய அமைச்சர்கள் விளக்கம் அளிக்க பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.-Solratha Sollitom

Sep 6, 202316 min

'இந்தியா' பெயரை மாற்றப்போகிறதா பா.ஜ.க? | 05/09/2023

* முஸ்லீமான எனக்குக் கோயில் கட்டியதுதான் சனாதனம் - குஷ்பு* ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத் குடியரசுத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. .* "பாசிச பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்தும் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர் சூட்டியதில் இருந்து பா.ஜ.க.வுக்கு இந்தியா என்ற சொல்லே கசந்துவருகிறது. இந்தியாவை வளர்ச்சிமிகு இந்தியாவாக மாற்றப் போகிறோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா என்ற பெயரை மட்டும்தான் மாற்ற முடிந்திருக்கிறது. - ஸ்டாலின்* நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதில் 'பாரத்' என மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் 'பாரத்' என்ற பெயர் மாற்றம் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. * 'இண்டியா' கூட்டணி பெயரை 'பாரத்' என மாற்றினால் என்ன செய்வீர்கள்?: கெஜ்ரிவால்...* சசிகலா, இளவரசி இருவருக்கும் ஜாமீனில் வெளியே வராதபடி பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவு* அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி கொடுப்பதாக அறிவித்திருந்தார். மேலும், உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்தை வாளால் கிழித்து, தீயிட்டுக் கொளுத்தும் வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.* அன்னிய செலாவணி மோசடி வழக்கில், முன்னாள் எம்.பி., தினகரனுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வசூலிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என அமலாக்கத்துறையிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.* பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்காக முரசொலி அறக்கட்டளை தரப்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.-Solratha Sollitom.

Sep 5, 202326 min

தி.மு.க.விடம் சரணடைகிறாரா சீமான்? | Solratha Sollitom - 04/09/2023

* பிரதமராக மோடி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை தருமாறு ஆர்டிஐ மூலம் கோரப்பட்டிருந்த கேள்வியில், "ஒரு நாள் கூட பிரதமர் மோடி விடுமுறை எடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் பதில் அளித்துள்ளது. இந்தியாவின் பிரதமர் ஒருவர் எல்லா நேரத்திலும் பணியில் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளது.* உதயநிதியின் 'சனாதன ஒழிப்பு பேச்சு'க்கு பா.ஜ.க, வலதுசாரிகள் எதிர்ப்பு* சென்னை ஐகோர்ட், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. * "திமுகவுடன் இருப்பது பங்காளிச்சண்டைதான். திராவிடத்தை ஒழிப்போம் என்று சொல்லவில்லை. மோடியை எதிர்த்து நின்றால் தி.மு.க.வை ஆதரிப்பேன்" - சீமான்* பல்வேறு புகார்களின் எதிரொலியாக, அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியர் அலி மற்றும் அவரது மருமகன் ரிஸ்வான் ஆகியோரின் கட்சிப் பதவியை திமுக தலைமை பறித்துள்ளது.* மது காரணமாகத் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 4 பேர் கொலை.-The Imperfect Show

Sep 4, 202326 min

எதிர்க்கட்சிகளின் கூட்டணியை எதிர்கொள்ளுமா பா.ஜ.க? | Solratha Sollitom-02/09/2023

* ஓ.டி.டி பரிந்துரை* புத்தகப்பரிந்துரை* நாடாளுமன்றத் தேர்தல் அலசல்-Solratha Sollitom

Sep 2, 202326 min

ஸ்டாலின் அரசைக் கலைக்க மோடி திட்டமா? | Solratha Sollitom-01/09/2023

* அண்ணாமலை 2-ம் கட்ட யாத்திரையை வருகிற 4-ந்தேதி தொடங்குகிறார்.* ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ரூ.423 கோடி செலவில் விண்ணில் ஏவப்படவிருக்கிறது 'ஆதித்யா எல்-1' விண்கலம்.* கோடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமையிலான குழுவினர் சேலம் மாவட்டத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். * சேலம் மாவட்டம் மேட்டூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பாமக-வை சேர்ந்த சதாசிவம் மீது வரதட்சணைப்புகார் * நடிகை விஜயலட்சுமியிடம் துணை கமிஷனர் உமையாளர் விசாரணை * எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு * ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு மேற்கொள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்தது மரபு மீறிய தவறான செயல் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.-Solratha Sollitom

Sep 1, 202322 min

பன்னீர்செல்வத்துக்கு விசாரணை சிக்கல் ; செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் சிக்கல்! | Solratha Sollitom-31/08/2023

* முதல் அமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை தெலுங்கானா மாநில முதல்-மந்திரியின் செயலாளர் ஸ்மிதா சபர்வால், பழங்குடியின நலத்துறை அரசு செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது. * முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. * காவிரி பிரச்சினையில் கர்நாடகா இதுவரை தமிழகத்திற்கு திறந்துவிட்ட தண்ணீர் தொடர்பான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. * செந்தில்பாலாஜிக்கு எந்த நீதிமன்றம் ஜாமீன் வழங்குவது என்பதில் சிக்கல்* ஸ்டாலின் தொடங்கும் பிராட்காஸ்ட்* * செப்.18 முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு-Solratha Sollitom

Aug 31, 202320 min

மோடி பொய் சொல்கிறார் - குற்றம் சாட்டும் ராகுல்! | Solratha Sollitom-30/08/2023

* ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைப்பு* "நான் தமிழகத்தில் தனியாக நின்று தேர்தலை சந்திக்க தயார். ஆனால் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த பா.ஜனாதாவினர் என்னை எதிர்த்து ஒரு சதவீதம் வாக்கு அதிகமாக வாங்க முடியுமா? பா.ஜ.க.வில் 40 தொகுதியிலும் போட்டியிட வேட்பாளர்கள் உள்ளார்களா?" - சீமான்* கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.* ஒரே நேரத்தில் மீனாட்சி அம்மன் கோயிலில் எடப்பாடி, கனிமொழி* "மோடி வாரணாசியில் போட்டியிட்டால் சீமான் வாரணாசியில் போட்டியிடத் தயாரா?" - அண்ணாமலை* நாளை மும்பையில் நடக்கவிருக்கும் இந்தியா கூட்டணி ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் பயணம்* கர்நாடக முதல்வர் சித்தராமையா அணைகளில் தண்ணீர் வாய்ப்பு இல்லை என்று கூறி உள்ளார். காவிரி மேலாண்மை ஆணையம் நாங்கள் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை. காவிரி ஒழுங்காற்றுக் குழு கூறியதை தான் காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகையால் வேறுவழி கிடையாது. மறுபடியும் நீதிமன்றத்தை அணுக வேண்டியதுதான்- துரைமுருகன்.-Solratha Sollitom.

Aug 30, 202322 min

Edappadi -யைப் பார்த்து பொறாமைப்படுகிறாரா M.K.Stalin? | Solrathai Sollitom-29/08/2023

* தமிழ்நாடு எதிர்பார்க்கும் அளவு காவிரி நீர் திறந்துவிட முடியாது - கர்நாடகம்* மத்திய அரசின் 'விஸ்வகர்மா யோஜனா' என்ற திட்டத்தை எதிர்த்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்.* நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் விஷாலிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதில் அளித்த நடிகர் விஷால், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு வாழ்த்துகள். விஜய் நல்லது செய்ய வேண்டும் என ஒரு வாக்காளராக நினைக்கிறேன்' என்றார். மேலும், தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எந்த விருதுகளின் மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது என்றும் விஷால் கூறினார்.* அதிமுக மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. அதிமுக மாநாட்டை பார்த்து பொறாமை அடைந்து திமுக மாநாட்டை நடத்துகிறது. மத்திய அரசின் திட்டங்கள் குறித்துதான் சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது ஊழல் அல்ல. மக்களவை தேர்தலுக்கான முதல்கட்டப்பணிகள் தொடங்கியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு அடித்தளம் கடுமையாக அமைக்கப்பட்டுள்ளது. எடப்பாடி* தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான 11 வழக்குகளை ரத்துசெய்யக் கோரி ஹெச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். நான்கு வழக்குகள் மட்டும் தள்ளுபடி.-Solratha Sollitom

Aug 29, 202319 min

கைதாகிறாரா சீமான்? | Solratha Sollitom-28/08/2023

* மதுரை ரயிலில் தீ விபத்து * கடந்த சில நாட்களாக மெட்ரோ ரெயில் நிர்வாகம், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிறுத்தம் வரும்போது, "புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்" என்று அறிவிப்பு செய்யாமல், "புறநகர் பேருந்து நிறுத்தம்" என்று மட்டுமே அறிவிப்பு செய்கிறது. - எடப்பாடி பழனிசாமி * மோடி, சந்திரயான் - 3 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கிய பகுதிக்கு சிவசக்தி என பெயர் வைத்தார். பு இந்நிலையில், நிலவை இந்து நாடாக அறிவிக்க வேண்டுமென மத அமைப்பான அனைத்திந்திய இந்து மகாசபா தேசிய தலைவர் சக்ரபனி மகாராஜ் தெரிவித்தார். * கர்நாடகாவில் கடந்த பா.ஜனதா ஆட்சியில் கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் வாங்கியதில் சுகாதார துறையில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விசாரணை ஆணையம், முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி, 3 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.* 19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 9 நாட்களாக நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று, இரவு ஆண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதிசுற்று நடந்தது. எதிர்பார்த்தபடியே ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா அதிகபட்சமாக 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். * இஸ்ரோ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஆதித்யா எல்1 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து செப்டம்பர் 2ம் தேதி காலை 11.50 மணிக்கு செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. * சொத்து குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என ஆர்.டி.ஐ. ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணை முடிவடைந்து, குற்றவாளிகள் தண்டனை அனுபவித்த நிலையில், அரசு வழக்கறிஞர் ஒருவரை நியமித்து சொத்துகள் ஏலம் விடுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் தெரிவித்திருந்தது.-Solratha Sollitom

Aug 28, 202323 min

ஸ்டாலின் - எடப்பாடி - அண்ணாமலை : சந்திக்கும் சவால்கள் | Solratha Sollitom-26/08/2023

* புத்தகப்பரிந்துரை* ஓ.டி.டி பரிந்துரை* அரசியல் அலசல்-Solratha Sollitom.

Aug 26, 202321 min

பன்னீர்செல்வத்தின் அரசியல் கனவுக்கு முற்றுப்புள்ள | Solratha Sollitom-25/08/2023

* ஓபிஎஸ் உள்ளிட்டோர் மேல்முறையீடு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், ஓபிஎஸ் உள்ளிட்டோரை நீக்கிய சிறப்பு தீர்மானத்துக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. * அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு குறித்து, சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- "நீதி, தர்மம், உண்மை வென்றுள்ளது"* திருக்குவளை பள்ளியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடந்த நிகழ்ச்சியில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்து தொடங்கி வைத்தார். * தேசிய திரைப்பட விருது அரசியல்* இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் அங்கீகாரத்தையும், உறுப்பினர் பதவியையும் காலவரையின்றி இடைநீக்கம் செய்ததாக அறிவித்திருக்கிறது உலக மல்யுத்தக் கூட்டமைப்பு.* நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இவ்வாறு எச்.ராஜா பேசுவது முதல் முறை அல்ல என்றும், இதுபோல் கருத்துகளை கூறக்கூடாது என்றும் தெரிவித்ததுடன், பெண்களை குறி வைத்து குற்றச்சாட்டுகளை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், வெறுப்புணர்வு பேச்சுக்களுக்கு எதிராக உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியதையும் குறிப்பிட்டார்.-Solratha Sollitom.

Aug 25, 202323 min

கொடநாடு விவகாரம் - சிக்கலில் மாட்டும் எடப்பாடி பழனிசாமி! | Solratha Sollitom-24/08/2023

* கவர்னரை தமிழ்நாட்டில் போட்டி போட அழைப்பது போல, கவர்னர் பீகாருக்கு போட்டி போட அழைத்தால், திமுகவினர் இந்தி தெரியாமல் எங்கே போவார்கள்? - அண்ணாமலை* முதுகலை மருத்துவப்படிப்பில், மூன்றாம் பாலினத்தவருக்கான இட ஒதுக்கீடு மூலம் முதல்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தெலங்கானாவை சேர்ந்த ரூத் ஜான் கொய்யாலா. . * நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய சந்திரயான் 3-ன் ரோவர் ஆய்வு பணிகளை தொடங்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. * சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக நடத்திய நீட் தேர்வு போராட்டம் நாடகம் என எதிர்க்கட்சித்தலைவர் கூறியது குறித்து அமைச்சர் உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது; "நீட் தேர்வு போராட்டம் நாடகமாகவே இருந்தாலும் அதிலாவது ஈபிஎஸ் பங்கேற்று இருக்கலாமே. * கோடநாடு வழக்கு குறித்து ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் அண்ணன் தனபால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;- எனது தம்பி கனகராஜ் கோடநாடு சம்பவத்தில் ஈடுபட்டு திரும்பிய நேரத்தில், பெருந்துறையில் வைத்து சந்தித்தேன். கோடநாடு பங்களாவில் இருந்து, 5 பெரிய பைகளை ஈபிஎஸ் கூறியதன் பெயரில் எடுத்து வந்ததாக கூறினார். அதில் ஏராளமான சொத்து ஆவணங்கள் இருந்தன. தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறிய நிலையில் தான், ஆத்தூரில் விபத்தில் கனகராஜ் உயிரிழந்தார். எனது தம்பி உயிரிழந்தது விபத்து அல்ல; திட்டமிட்ட கொலை. வழக்கு தொடர்பாக எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும். வழக்கில் எடப்பாடி பழனிசாமியை இதுவரை விசாரிக்காதது ஏன் என தெரியவில்லை. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருக்கிறது. டி முதல்-அமைச்சர் மீது நம்பிக்கை இருக்கிறது. எனக்கு உரியப் பாதுகாப்பு முதல்-அமைச்சர் கொடுப்பார் என்று நம்புகிறேன். விரைவில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிக்குத் தண்டனை வாங்கித் தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். * கோவை ஈஷா யோகா ஃபவுண்டேஷனில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கட்டிடங்களைக் கட்டுவதற்காக முன் அனுமதியோ, தடையில்லா சான்றிதழோ பெறவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.* ஓமந்தூரார் மருத்துவமனையானது தலைமைச் செயலகமாக மாறாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் * முஸ்லீம் மாணவியைப் புறக்கணித்த குஜராத் பள்ளி.-Solratha Sollitom.

Aug 24, 202318 min

தி.மு.கவுக்கு ஆப்பு வைக்கும் நீதிமன்றம்! | Solratha Sollitom-23/08/2023

* கவர்னர் பதவி தொடர்பாக பேசும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பதவியை துறந்து விட்டு குரூப்-4 தேர்வை எழுதி வெற்றி பெறட்டும் பார்ப்போம். - அண்ணாமலை* தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சொத்துக்குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்கும் ஆனந்த் வெங்கடேஷ்* யூ ட்யூப் மூலம் பிரசவம் பார்த்து மரணம்* சந்திராயன்-3 நிலவில் சாதனை படைத்துள்ளது. எடப்பாடியாரின் மாநாடு பூமியில் சாதனை படைத்துள்ளது. - ஆர்.பி.உதயகுமார்* "அ.தி.மு.க எங்கள் பங்காளி. பாஜகதான் பகையாளி. எதிர்காலத்தில் அதிமுகவினர் எங்களுடன் இணைய வாய்ப்புள்ளது" - ஆர்.எஸ்.பாரதி* காவிரி விவகாரம்: பெங்களூருவில் அனைத்துக் கட்சி கூட்டம்...* அனைத்துச்சாதியினரும் அர்ச்சகர் ஆகத்தடையில்லை - உச்சநீதிமன்றம்செப்டம்பர் 20-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.-Solratha Sollitom.

Aug 23, 202321 min

TNPSC விவகாரம் - மீண்டும் ஸ்டாலினுடன் மோதும் ஆளுநர் ரவி! | solratha sollitom-22/8/2023

* நாளை (புதன்கிழமை) மாலை 5.27 மணிக்கு நிலவில் இறங்கும், 'சந்திரயான்-3'-ல் இருந்து பிரிந்து சென்ற 'விக்ரம் லேண்டர்' என இஸ்ரோ தெரிவித்துள்ளது.* அண்ணாமலை யாத்திரையின் முதற்கட்டம் திருநெல்வேலியில் இன்றுடன் நிறைவு பெற உள்ளது. * டி.என்.பி.எஸ்.சி. தலைவர், உறுப்பினர் நியமனம் தொடர்பான ஆவணத்தை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். * ''வயதில் சிறியவர்களாக இருந்தாலும் யோகிகள், ஆன்மிகவாதிகள் காலில் விழுவேன்" - ரஜினிகாந்த். * பிரதமர் மோடி தென் ஆப்ரிக்கா புறப்பட்டார்...* கண் இருந்தும் குருடர்கள்போல, சில நயவஞ்சகர்கள், `எடப்பாடி பழனிசாமி என்ன புரட்சி செய்தார்?' எனக் கேள்வி எழுப்புகிறார்கள். அவர் செய்த வரலாற்றை படித்துப் பார்த்தால் அவர்களுக்குத் தெரியும். 50 லட்சம் பேர் வர திட்டமிட்டிருந்த நிலையில், காவல்துறையினரின் குளறுபடியால் 35 லட்சம் பேர் வர முடியாததால் உணவு மீதமானது. மாநாட்டு வெற்றியை ஏற்க முடியாதவர்கள் அதை மறைக்க, புளியோதரை மீதமானதை மிகைப்படுத்திப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். - ஆர்.பி.உதயகுமார்.-Solratha sollitom.

Aug 22, 202322 min

எடப்பாடிக்கு புதுப்பட்டம்....எல்லை மீறிய உதயநிதி! | Solratha Sollitom-21/08/2023

* யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த ரஜினி* அ.தி.மு.க மாநாடு - எஸ்.பி.வேலுமணி ஒயிலாட்டம் - எடப்பாடிக்குப் புரட்சித்தமிழர் பட்டம் - * பிரமாண்ட உணவு தயாரிப்பு முதல் ஹெலிகாப்டர் வரை - மதுரை அதிமுக மாநாட்டின் சுவாரஸ்யத் தொகுப்பு* 2010-ல் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மத்தியிலும், மாநிலத்தில் திமுக ஆட்சியில் இருந்த போதும் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இதை மறைத்துவிட்டு தற்போது நீட் ரத்து கோரி உண்ணாவிரத நாடகம் நடத்துகின்றனர்- எடப்பாடி பழனிசாமி,* நீட் ரகசியம், ஆளுநருக்கு சவால் - பொங்கிய உதயநிதி* 'நீட் ரத்து என்ற வாக்குறுதியை இந்தியா கூட்டணி அறிவிக்கும்': ஸ்டாலின்...* ”மாணவர்கள் தற்கொலை சம்பவங்கள் நடப்பது வாடிக்கையான ஒன்றுதான்... அதை அரசியல் ஆக்க கூடாது” - நீட் தேர்வால் உயிரிழந்தவர்கள் பற்றிய கேள்விக்கு எல்.முருகன் பதில். "மாணவர்கள் தற்கொலைக்குத் திமுகதான் காரணம். அவர்கள்மீது வழக்குப்பதிய வேண்டும்" - அண்ணாமலை* டெல்லி அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறையின் துணை இயக்குநராக இருப்பவர், அவருடைய நண்பரின் மகளை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. * குஜராத் உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்* திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த மத்தூர் கிராமத்தில் வகுப்பறை பூட்டுகளில் அசுத்தத்தை பூசி பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டி, மாணவிகள் பயன்படுத்தும் கழிவறை போன்றவற்றை சேதப்படுத்திய மாணவர்கள் கைது* 'புரட்சித்தமிழர்' எடப்பாடிக்குப் போட்டியாகப் 'புரட்சித்தொண்டன்' நாளிதழைத் தொடங்கினார் ஓ.பன்னீர்செல்வம். * 'எடப்பாடிக்குப் புரட்சித் தமிழர் பட்டம் கொடுப்பதற்குப் பதில் துரோகத்தமிழர் பட்டம் கொடுக்கலாம்' - தினகரன்.* சென்னை வேளச்சேரியில் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Aug 21, 202322 min

மோடி ஆட்சி ஊழல் ஆட்சியா? | Solratha Sollitom-19/08/2022

• புத்தகப்பரிந்துரை• ஓ.டி.டி பரிந்துரை• மோடி ஆட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்.-Solratha Sollitom

Aug 19, 202328 min

மோடியை வறுத்தெடுத்த ஸ்டாலின்! | Solratha Sollitom-18/08/2023

* "எ.வ.வேலு பேச்சை வெட்டி ஒட்டி வாட்ஸ்-அப் யுனிவர்சிட்டியில் வந்ததை வைத்து பிரதமர் நாடாளுமன்றத்தில் பேசுகிறார். மோடி சுட்ட வடைகள் ஊசிப்போச்சு" - ஸ்டாலின்* மதுரையில் அதிமுக மாநாடு நடத்த தடை இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்* சீனக்கடன் செயலி மோசடிக்குத் துணைபோன தமிழக இளைஞர்- Solratha Sollitom

Aug 18, 202317 min

ஜெ.தீபாவுக்கு சசிகலாவால் ஆபத்தா? | Solratha Sollitom-17/08/2023

* 'ஜெயிலர்' திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.375.40 கோடியை கடந்துள்ளது. * மணிப்பூரில் பழங்குடிகள் வசிக்கும் மாவட்டங்களுக்கு தனியாக தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு குகி ஸோ எம்எல்ஏக்கள் 10 பேர் கடிதம் எழுதியுள்ளனர்.* நாங்குநேரியில் பள்ளி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் துறைரீதியான முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை இயக்குநரிடம் நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்ராசு அறிக்கையை தாக்கல் செய்தார். பள்ளியில் மாணவருக்கு நேரிட்ட சாதிய கொடுமைகள் குறித்து விரிவான தகவல்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது சகோதரியை விடுதியுடன் கூடிய வேறு பள்ளியில் படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.* எனது பிறந்தநாளுக்காக, நீங்கள் சிரமப்பட்டு, பயணித்து எனது இல்லம் வருவதை தவிர்த்துவிட்டு, தாங்கள் இருக்கும் பகுதியிலேயே உங்கள் அருகில் இருக்கும் ஏழை எளிய சாமானிய மக்களுக்கு, உங்களால் இயன்ற அளவில் நீங்கள் செய்கின்ற உதவிகளே, நீங்கள் எனக்கு அளிக்கின்ற, சிறந்த பிறந்தநாள் பரிசாக, மனதார ஏற்றுக்கொள்கிறேன். - சசிகலா* சசிகலாவால் தனது உயிருக்கும் தன் கணவரின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும், இது தொடர்பாக புகார் அளித்திருப்பதாகவும் ஜெ.தீபா தெரிவித்தார்.* தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி மற்றும் மகள் துவாரகா உயிருடன் இருப்பதாக மதிவதனியின் சகோதரி வீடியோ வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.* சமுதாயத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக ஏராளமான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் சில வார்த்தைகள் கோர்ட் நடைமுறையில் கூட பயன்பாட்டில் உள்ளது. அது போன்ற வார்த்தைகளுக்கு சுப்ரீம் கோர்ட் கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.அதன்படி, 40 வார்த்தைகளுக்கு பதில், புதிய வார்த்தைகள் அடங்கிய கையேடு புத்தகத்தை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் வெளியிட்டுள்ளார்.-Solratha Sollitom

Aug 17, 202323 min

அ.தி.மு.க மாநாட்டைச் சீர்குலைக்க சதி செய்கிறாரா உதயநிதி? | Solratha Sollitom-16/08/2023

* 2018-ல் சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் அன்றைய மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தராஜன் முன்பாக 'பாசிச பா.ஜ.க. ஒழிக' என முழக்கமிட்டதற்காக கைது செய்யப்பட்ட இளம்பெண் சோபியா மீதான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.* நீட் ரத்தை வலியுறுத்தி திமுக இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணி ஆகியவை இணைந்து உண்ணாவிரதம்* "அதிமுக மாநாடு வெளியே தெரிந்துவிடக்கூடாது. திமுகவினரின் ஆர்ப்பாட்டம்தான் தெரியவேண்டும் என்பதற்காக மாவட்டம் தோறும் நீட் தேர்வைக் கண்டித்து ஆகஸ்ட் 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தை வைத்துள்ளனர். இது ஓர் அரசியல் காழ்ப்புணர்ச்சி" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.* பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக, மத்திய கணக்கு தணிக்கை குழு (சிஏஜி) அறிக்கையில் தெரிவித்துள்ளது. * 82% இந்துக்களைக் கொண்ட இந்தியா இந்துதேசம்தான் - மத்தியப்பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத். இந்தியா அனைவருக்குமான நாடு. இந்துதேசம் பற்றிப் பேசுபவர்கள் ராஜினாமா செய்யவேண்டும் - திக்விஜய்சிங்* அடுத்த சுதந்திரதினத்திலும் செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றுவேன். அடுத்த ஐந்தாண்டுகள் வளர்ச்சியின் காலமாக இருக்கும். 2047ஆம் ஆண்டில் வளர்ந்த இந்தியாவாக இருக்கும் - மோடிஊழலை முடிவுக்குக் கொண்டுவருவது பற்றி பிரதமர் கூறுகிறார். கடந்த பத்தாண்டுகளாக அவர்தானே பிரதமராக இருந்தார்? - கபில்சிபில்* அஜித் யாரு என்று கேட்ட துரைமுருகன்* நேருவின் பாரம்பரியத்தை மாற்றுதல், சிதைத்தல், அவதூறு செய்தல், அழித்தல் என்ற ஒற்றை நோக்கத்துடனேயே பிரதமர் மோடி இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ‘நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம்’ என்பது ‘பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம்’ என்று அதிகாரபூர்வமாக பெயர் மாற்றப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.-Solratha Sollitom

Aug 16, 202322 min

கவர்னரைப் புறக்கணிக்கும் ஸ்டாலின்! | Solratha Sollitom-14/08/2023

* இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவும் பிரச்சினையில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும்,பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.* மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் நீட் எதிர்ப்பு - கவர்னர் முன் நீட்டை எதிர்த்த தந்தை சேலத்தைச் சேர்ந்த அம்மாசியப்பன் ராமசாமி, நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவன் ஜெகதீஷ். தந்தை செல்வசேகர் தற்கொலை, ஜெகதீஷ் நண்பன் ஃபயாஸ்தீன் கலங்கடிக்கும் பேட்டி* சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கொச்சியில் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறானது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. * பல்கலைக் கழகங்களைச் சிதைத்தும், உயர் கல்வித் துறையைக் குழப்பியும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி தராமலும் - இதன் உச்சமாக தமிழ்நாட்டு மாணவர்களை, பெற்றோர்களை, அவர்களது எதிர்காலத்தைச் சிதைக்கும் வகையில் பேசி வரும் கவர்னரை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதன் அடையாளமாக ஆகஸ்ட் 15 அன்று, கவர்னர் மாளிகையில், அவர் ஏற்பாடு செய்திருக்கும் தேநீர் விருந்தினைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். - ஸ்டாலின்* காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (திங்கட்கிழமை) வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Aug 14, 202323 min

பா.ஜ.கவின் எதிரி காங்கிரஸா தி.மு.க.வா? | Solratha Sollitom-12/08/2023

* புத்தகப்பரிந்துரை* ஓ.டி.டி பரிந்துரை* மோடி, அமித்ஷா, நிர்மலா சீதாராமனின் தி.மு.க மீதான விமர்சனங்கள்-Solratha Sollitom

Aug 12, 202322 min

தி.மு.க.வைச் சீண்டிய நிர்மலா சீதாராமன், சுயபுராணம் பாடிய மோடி! | Solratha Sollitom-10/08/2023

* "சட்டப்பேரவையில் ஜெயலலிதாவை அவமதித்த தி.மு.க.வினர், பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசலாமா?" - நிர்மலா சீதாராமன் * தேர்தல் முறைகேடு புகாரில் சிக்கியுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் டுவிட்டர் பதிவுகளை வழங்காமல் தாமதம் ஏற்படுத்திய டுவிட்டர் (தற்போதைய 'எக்ஸ்') நிறுவனத்துக்கு ரூ.2.89 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. * நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்.பி., ராகுல், பிரதமர் மோடியை குற்றஞ்சாட்டி பேசியது அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. கடந்தமுறை அதானியைக் குற்றம் சாட்டி ராகுல் பேசியதும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டிருந்தது.* அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், வேலூர் நீதிமன்றத்தில் மிக மோசமான முறையில் விசாரணை நடந்துள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.* தேர்தல் கமிஷனர்களை நியமிக்க பிரதமர், எதிர்க்கட்சிதலைவர், தலைமை நீதிபதி அடங்கிய குழுவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தலைமை நீதிபதி இல்லாமல் குழு அமைக்க மத்திய அரசு மசோதா தாக்கல்* பிரதமர் மோடியின் மவுனத்தை கலைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தோம் என மக்களவை காங்கிரஸ் எம்.பி.,க்கள் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெறும் அளவுக்கு எங்களிடம் பலம் இல்லை என்பது எங்களுக்கே தெரியும். மணிப்பூர் வன்முறை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது. இந்திய நாட்டு மக்கள் நலன் மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம். நாங்கள் எந்த பாஜக உறுப்பினரையும் அவைக்கு வரச் சொல்லவில்லை; பிரதமர் வர வேண்டும் என்றே கூறினோம் எனவும் கூறினார்.* தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு மத்திய அரசு வழங்கும் நிதியில் 90 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆர்டிஐ தகவல் மூலம் இது தெரியவந்துள்ளது.* வெற்று சவடால் அடித்த மோடி.-Solratha Sollitom

Aug 11, 202318 min

பொங்கி எழுந்த ராகுல்...புகார் சொன்ன பா.ஜ.க! | Solratha Sollitom-09/08/2023

* கல்வெட்டு ஆய்வாளர் செ.ராசு காலமானார்...* நான் மணிப்பூருக்கு நேரில் சென்றேன், ஆனால் பிரதமர் இதுவரை செல்லவில்லை. அவரைப் பொறுத்தவரை மணிப்பூர், இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லை; பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் மாநிலத்தை கைவிட்டு விட்டார். பாரத மாதாவைக் கொன்றுவிட்டீர்கள் - ராகுல்* நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாததின்போது மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி பேசும்போது கூறியதாவது: "நான் ஒன்றை ஆட்சேபிக்கிறேன். எனக்கு முன் பேசியவர் வெளியேறும் முன் அநாகரீகமாக நடந்து கொண்டார். பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்து உள்ளபோது நாடாளுமன்றத்தில் பறக்கும் முத்தம் கொடுப்பது பெண் வெறுப்பு கொண்ட ஆண் மட்டுமே. இதுபோன்ற கண்ணியமற்ற நடத்தை இதற்கு முன் இருந்ததில்லை. ஆனால் இப்போது நாடாளுமன்றத்தில் பார்த்தேன்..."* கரூர் ராம்நகரில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் புதிதாக கட்டிவரும் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை * நாடாளுமன்றத்தில் டெல்லி சேவைகள் மசோதா 2023-க்கு எதிராக திமுக வாக்களித்ததற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். * மத்திய பிரதேசத்தை சேர்ந்த பிரபல மல்யுத்த வீராங்கனை ராணி ராணா கணவர், மாமியார் மீது புகார்* போலி உருவங்களை உருவாக்கி 'வீடியோ கால்' அழைத்து மோசடி...* கைது செய்யப்படுவீர்கள் என்று என்னை அமைச்சர் ஸ்மிருதி ராணி அச்சுறுத்துவதாக திமுக உறுப்பினர் ஆ.ராசா குற்றச்சாட்டியுள்ளார்

Aug 9, 202321 min

அன்புமணி மீது பாயும் தி.மு.க...மோடியை வறுத்தெடுத்த எதிர்க்கட்சிகள்! | Solratha Sollitom-08/08/2023

* மதவாத உணர்வுடன் செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை* அன்புமணியைக் காட்டமாக விமர்சித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் * அமைச்சர் செந்தில்பாலாஜி பண மோசடி புகார் தொடர்பான வழக்கில் விரிவான விசாரணை மேற்கொள்ள 6 மாதங்கள் அவகாசம் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்தனர். செப்டம்பர் 30-க்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று மத்திய குற்றப்ப்ரிவு போலீசாருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். * செந்தில்பாலாஜியிடம் அமலாக்கத்துறை விமர்சனம்* நம்பிக்கையில்லாத் தீர்மான விவாதங்கள்* ராகுலுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம், அவருக்கு இன்னும் நற்சான்றிதழ் வழங்கவில்லை என பா.ஜ., எம்.பி., நிஷிகாந்த் துபே கூறினார்....-Solratha Sollitom.

Aug 8, 202321 min

நாடாளுமன்றம் வந்த ராகுல் - எப்படி எதிர்கொள்வார் மோடி? | Solratha Sollitom-07/08/2023

* புரட்சிகரப் பாடகர் கத்தார் மரணம்* 137 நாட்களுக்கு பிறகு நாடாளுமன்றம் வந்தார் ராகுல்...* செந்தில் பாலாஜியை 5 நாள் காவலில் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி...* தமிழ்நாட்டில் ஒரே மாவட்டத்தில் 3 மக்களவைத் தொகுதிகள் பரவிக் கிடக்கின்றன. இந்த அளவுக்கு பரந்து விரிந்த மாவட்ட எல்லைகளை வைத்துக் கொண்டு எவ்வாறு சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியும்? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்* 30 ஆயிரம் கோடி ரூபாய் விவகாரம் தொடர்பான, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பிராணேஷ் ராஜமாணிக்கம் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார். * மணிப்பூர் கலவரம் குறித்து விசாரிக்க மாவட்ட வாரியாக சிறப்பு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது என உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி கூறியுள்ளார். * 'என்.எல்.சி நிறுவனத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும் புதிதாக பயிர்கள் ஏதும் பயிரிடக் கூடாது; மீறினால், சட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம். ₹25 லட்சம் இழப்பீடு என்பது 2014க்கு பிறகு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு மட்டுமே வழங்க முடியும். அதற்கு முன்பாக நிலத்தை கொடுத்தவர்களுக்கு வழங்க முடியாது. தொழில் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சி தொடர்பான விவகாரங்களில் அரசின் கொள்கை முடிவுகளில் நில உரிமையாளர்கள் தலையிட முடியாது' - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.* For Birthday wishes : [email protected], [email protected] Sollitom

Aug 7, 202321 min

மீண்டும் புகையும் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி! | Solratha Sollitom-05/08/2023

* புத்தகப்பரிந்துரை* ஓ.டி.டி பரிந்துரை* சிறுபான்மையினர் குறித்த சீமான் பேச்சுகள்* அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி உரசல்கள்.-Solratha Sollitom.

Aug 5, 202327 min

ராகுலுக்கும் ரவீந்திரநாத்துக்கும் கிடைத்த வெற்றி! | Solratha Sollitom-04/08/2023

* நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உரத்த குரலில் பேசியதை நான் கேட்டேன். அவருக்கு பாராளுமன்றம் பற்றிய கவலை இல்லை. அவருடைய கவலை எல்லாம் "என் மண் என் மக்கள்" நடைபயணம் உண்டான பயத்தால் அவர் கூக்குரல் இடுகிறார்..- நாடாளுமன்றத்தில் அமித்ஷா* பார்லிமென்டில் கோஷம் எழுப்பிய எம்.பி.,க்களை எச்சரித்த மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி, "அமைதியாக இருங்கள். இல்லையென்றால் உங்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறை வரும்" என்றார்.* ராகுலுக்கு சூரத் கோர்ட்டு வழங்கிய தண்டனைக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. * தேனி எம்.பி ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது என்ற சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. * அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்தார். * எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இந்தியா' என்று பெயர்வைப்பதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பொது நல மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, இதுகுறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசு, மத்திய தேர்தல் ஆணையம், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.* தமிழ்நாட்டில், காவிரி டெல்டா பகுதிகளில், குறுவை சாகுபடிக்காக காத்திருக்கும் நெற்பயிரைக் காப்பாற்றுவதில் காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையை எடுத்துரைத்து, காவிரியிலிருந்து உரிய நீரினைத் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடுமாறு கோரி, நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். * எதிர்க்கட்சி கூட்டணியை ‛திமிர்க் கூட்டணி' என அழையுங்கள்: தன் கட்சி எம்.பி.க்களிடம் மோடி* அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை* தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க. இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் யாருடனும் கூட்டணியில் இல்லை - அன்புமணி* For Birthday wishes ; [email protected], [email protected] :Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Aug 4, 202320 min

சிறுபான்மையினர்' இழிவான சொல்லா? - சீமானின் விதண்டாவாதம்! | Solratha Sollitom-03/08/2023

* கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உதவியாளர் வீடு உள்பட 4 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், கோவையிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. * காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சபாநாயகர் ஜகதீப் தன்கர் இடையே நடந்த சுவாரஸ்யமான விவாதம் அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. முன்னதாக மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், "விதி எண் 267-ன் கீழ் விவாதம் நடத்த நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். அதற்கான காரணத்தை நாங்கள் கூறிய போதும் நீங்கள் அதை ஏற்கவில்லை. நேற்று இது தொடர்பாக உங்களிடம் கோரிக்கை வைத்த போது, நீங்கள் கோபமாக இருந்தீர்கள்" என்று கூறினார்இதைக் கேட்டு சிரித்தபடி சபாநாயகர் ஜகதீப் தன்கர், "எனக்கு திருமணமாகி 45 ஆண்டுகள் ஆகிறது. நான் எப்போதும் கோபப்பட மாட்டேன்" என்றார். அதற்கு மல்லிகார்ஜுன கார்கே, "வெளியில் காட்டிக்கொள்ளா விட்டாலும், உள்ளுக்குள் நீங்கள் கோபமாகவே இருக்கிறீர்கள்" என்றார். இந்த உரையாடலால் அவையில் சிரிப்பலை எழுந்தது. * அரியானாவில் கலவரம், வன்முறை* "சிறுபான்மையினர் என சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன்'' என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.* நாள்தோறும் ஏற்படும் அமளியால், சபையின் மாண்பு குலைந்து வருவதை சகித்துக் கொள்ள முடியாமல், 'கண்ணியத்துடன் எம்.பி.,க்கள் நடந்து கொள்ளும்வரை, லோக்சபாவுக்குள் வரமாட்டேன்' என்று, சபாநாயகர் ஓம் பிர்லா முடிவெடுத்துள்ளார்.* மோடி சமூகத்தினர் குறித்து அவதுாறாக பேசிய வழக்கில், ராகுல், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில்மனுவில் மன்னிப்பு கேட்க மறுத்துள்ளார்.* நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து நவம்பரில் முடிவெடுப்போம் என தினகரன் தெரிவித்துள்ளார். காங்கிரசுடனும் கூட்டணி இருக்கலாம்; பாஜகவுடனும் கூட்டணி இருக்கலாம் எனவும் அவர் பேட்டியளித்துள்ளார்.பேசுவதும் முதன்முறையல்ல. இதற்கு முன்பும் பலமுறை அதை செய்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.-Solratha Sollitom.

Aug 3, 202321 min

அடுத்த சிக்கலில் பன்னீர்...'ஆபாச' புகாரில் ரவீந்திரநாத்! | Solratha Sollitom-02/08/2023

* மணிப்பூரில் களநிலவரத்தை ஆய்வு செய்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவினர் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தனர். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி திரவுபதி முர்முவிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முறையிட்டனர். * செந்தில் பாலாஜி வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற அமலாக்கத்துறை கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.* 45 மத்திய பல்கலைக்கழகங்களில் 4% மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள். 6@ இணைப்பேராசிரியர்கள்* "இஸ்லாமியர்களை அவமதித்ததாக நான் மன்னிப்பு கேட்டால் அவர்கள் ஓட்டு போடுவார்களா?" - சீமான்* நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் முதல் பெண் காவடியாக (யானை பராமரிப்பாளர்) நியமிக்கப்பட்டுள்ள பெள்ளிக்கு, பணி நியமன ஆணையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.* ஓ.பன்னீர்செல்வத்தின் மூத்த மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது காரைக்குடியை சேர்ந்த காயத்ரி தேவி என்பவர் பாலியல் புகார்.-Solratha Sollitom.

Aug 2, 20231 min

ஸ்டாலின் அரசை சந்தேகப்படும் அ.தி.மு.க, எடப்பாடியைச் சந்தேகப்படும் தினகரன்! | Solratha Sollitom-01/08/2023

* சென்னை அருகே போலீஸ் என்கவுண்டரில் 2 ரவுடிகள் உயிரிழப்பு!* கிருஷ்ணகிரி விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் ஒன்றை அமித்ஷாவிடம் அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை வழங்கியுள்ளார்.* ,எம்.பி.க்கள் அனைவரும் தங்களது தொகுதிகளுக்கு சென்று, உள்ளூர் பிரச்சினைகள் பற்றி பேச வேண்டும். மக்கள் அதிகம் கூடும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். மக்களுடன் அதிக நேரம் செலவிடுவதுடன், அதிருப்தி, கோபத்தில் இருப்பவர்களை சமாதானப்படுத்த வேண்டும். - மோடி வெள்ளிக்கிழமை மணிப்பூர் மாநில சட்டம் - ஒழுங்கு டிஜிபி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.* பீகார் அரசின் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து பாட்னா நீதிபதிகள் உத்தரவிட்டனர். * நம்பிக்கையில்லா தீர்மானம்: ஆக.,8 முதல் விவாதம்: ஆக.10ல் பிரதமர் பதில். ஆகஸ்ட் 11 அன்று கூட்டத்தொடர் முடிவடைகிறது.* கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து தேனி பங்களாமேட்டில் தினகரன், பன்னீர் ஆர்ப்பாட்டம்.-Solratha Sollitom

Aug 1, 202321 min

சீமானைப் பின்பற்றும் அண்ணாமலை! | Solratha Sollitom-31/07/2023

* ராஜஸ்தான் ரயிலில் துப்பாக்கிச்சூடு நடத்திய ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர் * சிவகங்கை மாவட்டம் பிளஸ்டூ மாணவர் சகமாணவரால் கொலை* மணிப்பூர் - மத்திய, மாநில அரசுகளுக்குக் கடும் கண்டனம் தெரித்த உச்சநீதிமன்றம்* ஆகஸ்ட் 15 -ம் தேதி நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம். சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். - மோடி* தமிழகத்தில் கள்ளுக்கடை திறக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதி. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ரேஷன் கடைகளில் சீனிக்கு பதிலாக பனங்கருப்பட்டி வழங்கப்படும். - அண்ணாமலை* "என்எல்சி விவகாரத்தில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும்" - தமிழக அரசு மற்றும் என்எல்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. * அண்ணாமலையை விமர்சிக்கும் திருச்சி சூர்யா - எதிர்க்கும் அமர் பிரசாத் ரெட்டி* அதிமுகவின் கொடி, சின்னத்தை ஓபிஎஸ், டிடிவி தினகரன் தரப்பு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என எஸ்.பி.யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. * “எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா திட்டங்களை அதிமுகவால் மட்டுமே செயல்படுத்த முடியும்”-ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில்* அரசுக்கு எதிரானவர்களுடன் இணைந்து சதியாலோசனை செய்யும் மண்டபமாக, கிண்டி மாளிகையைப் பயன்படுத்தி வருகிறார் ஆளுநர் ரவி - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு----------

Aug 1, 202325 min

அண்ணாமலைக்கு பாத யாத்திரை பலன் அளிக்குமா? | Solratha Sollitom-29/07/2023

* புத்தகப்பரிந்துரை* ஓ.டி.டி.பரிந்துரை* அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' யாத்திரை குறித்த அலசல்-Solratha Sollitom.

Jul 29, 202331 min

நெய்வேலி போராட்டத்தைக் கையிலெடுத்த அன்புமணி | Solratha Sollitom-28/07/2023

* கொடநாடு வழக்கு செப்டம்பர் 8-ம் தேதிக்கு ஒத்திவைப்பு* கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. * அண்ணாமலை யாத்திரையில் அ.தி.மு.க சார்பாக ஆர்.பி.உதயகுமார் பங்கேற்கிறார்* அர்ச்சகர் நியமனத்தில் ஜாதிக்கு எந்த பங்கும் இல்லை, யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. * மதங்களைத் தாண்டிய மனிதநேயம்* 'இந்தியா' என்ற பெயரையே அரசியல் சாசனத்தில் இருந்து நீக்கவேண்டும் - கோரிக்கை வைத்த பா.ஜ.க எம்.பி.-Solratha Sollitom.

Jul 28, 202325 min

அமித்ஷா, அண்ணாமலை யாத்திரைக்கு வருவாரா எடப்பாடி? | Solratha Sollitom-27/07/2023

* ட்ரோன் இயக்குவதைப்போல் நடித்த மோடி* மதுவிலக்கைக் கொண்டுவர அண்ணாமலை வெள்ளை அறிக்கை* உடுப்பியில் உள்ள பாரா மெடிக்கல் கல்லூரியின் பெண்கள் கழிவறையில் ஒரு மாணவியை ரகசியமாக கேமிரா மூலம் படம் பிடித்ததாக 3 மாணவிகளை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இந்த நிலையில், அந்த மாணவிகள் மீது போலீஸார் தானாக முன்வந்து இன்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.* மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு உடை அணிந்து இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.* செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை ஆகஸ்ட் 1-ந்தேதி மதியம் 12 மணிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.-Solratha Sollitom

Jul 27, 202322 min

பா.ஜ.க கூட்டணியில் இணைகிறதா தே.மு.தி.க? | Solratha Sollitom-26/07/2023

* பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் * தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பதாகவும், அது குறித்து விவாதிக்க கோரியும் அதிமுக சார்பில் எம்.பி. சி.வி.சண்முகம் மாநிலங்களவையில் நோட்டீஸ் அளித்துள்ளார். * மாநிலங்களவையில் மணிப்பூர் கலவரக் கொடூரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது மைக் அணைக்கப்பட்டது. இது குறித்து எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையில் கடும் கண்டனம் தெரிவித்தன. * ஆர்ப்பாட்டத்தில் பெண் நிர்வாகி புகார் - தென்காசி தி.மு.க. மாவட்ட செயலாளர் நீக்கம் * அமலாக்கத்துறை இயக்குனர் சஞ்சய்குமார் மிஸ்ராவிற்கு, பணி நீட்டிப்பு வழங்க அனுமதிக்க கோரி மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் * செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.-Solratha Sollitom.

Jul 26, 202320 min

மணிப்பூர் பிரச்னையைத் திசை திருப்ப 'இந்தியா'வை அவமானப்படுத்துகிறாரா மோடி? | Solratha Sollitom - 25/07/2023

* நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கரின் புகைப்படங்கள் அகற்றக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு ஏற்பு* எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்துள்ளனர். தீவிரவாத அமைப்பான இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரிலும் கிழக்கின் இந்தியா கம்பெனி என்ற பெயரிலும் கூட இந்தியா என்ற பெயர் உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்* எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது என கட்சியினர் ஆலோசனை மேற்கொண்டனர் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. * மணிப்பூர் வன்முறை தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியதாவது:- மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடத்தபட்ட வன்முறை மிருகத்தனமானது.மிகவும் பயங்கரமானது.பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அமெரிக்கா தனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது. * பாதயாத்திரை துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு, அ.தி.மு.க., - பா.ம.க., - புதிய நீதி கட்சி - புதிய தமிழகம் கட்சிகளுக்கு அண்ணாமலை அழைப்பு* இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழ்நாடுதான் முதலிடம்!-Solratha Sollitom.

Jul 25, 202325 min

விஜயை எதிர்க்கும் விஜயகாந்த் கட்சி | Solratha Sollitom-24/07/2023

* கவர்னர் என்றால் நிறைய வேலைகள் இருக்கும் என்ற மாயை, பொதுமக்கள் மத்தியில் உள்ளது. எனக்கு எவ்வளவு வேலைகள் உள்ளன; நான் எவ்வளவு செய்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும்... எனக்கு அதிக வேலைகள் இல்லை. - ஆளுநர் ரவி* ஞானவாபி மசூதியில் 26-ந்தேதி வரை தொல்லியல்துறை ஆய்வு நடத்தக்கூடாது என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, மசூதி கமிட்டி இதுபற்றி மேல்முறையீடு செய்ய ஐகோர்ட்டுக்கு செல்லலாம் என்றும் தெரிவித்து உள்ளது. * நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவை மற்றும் மாநிலங்களவை இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பின. இதனால் இரு அவைகளும் நண்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. * மணிப்பூர் பா.ஜ.க எம்.எல்.ஏ பாவோலியன்லால் ஹாக்கிப் (Paolienlal Haokip) மணிப்பூரில் நடக்கும் இந்தக் கலவரத்துக்கு மணிப்பூரில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க அரசுதான் காரணம் என `அதிர்ச்சி' கிளப்பியிருக்கிறார்.இடையே அரசு நடுநிலையாக இருந்திருந்தால்... இந்தப் பெரும் உயிர் சேத வன்முறை மோதலைத் தவிர்க்கலாம்.* விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவராக இருப்பவர் கலிவரதன். இவர் கட்சி சார்பில் விக்கிரவாண்டியில் நேற்று நடந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் பேசும்போது, முன்னாள் முதல்-மந்திரி கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பேசினார் என குற்றச்சாட்டு எழுந்தது. * தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நீதிமன்ற வளாகங்களில் இனி திருவள்ளுவர், மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் உருவப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும், மற்ற தலைவர்களின் படங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டின் பதிவுத்துறை அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.* பிரேமலதா :- தே.மு.தி.க. இந்த நிமிடம் வரை யாருடனும் கூட்டணியில் இல்லை. விஜயகாந்த் போல் யாரும் வர முடியாது. அவருடன் யாரையும் ஒப்பிட முடியாது. மக்களுக்கு அவரைப் போல் யாரும் சேவை செய்ய முடியாது. விஜய் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதை வரவேற்கிறேன். அரசியல் வேறு, சினிமா வேறு... விஜயகாந்தைப் போல் விஜய் வர முடியாது. கேப்டன் மாதிரி என்று நினைத்தால் அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும். அரசியலுக்கு வருவரா இல்லையா என்பது விஜய் தான் தெளிவுபடுத்தணும் என்று கூறினார்.* பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டேன் என ஓபிஎஸ் சொல்கிறாரே.. என்ற கேள்விக்கு பதிலளித்த சசிகலா, "அதிமுகவின் அனைத்து அணிகளையும் ஒற்றுமைப்படுத்துவதே என்னுடைய பணி. பாஜகவுடன் கூட்டணி தொடரும் என ஓபிஎஸ் கூறியது அவரது தனிப்பட்ட முடிவு. அதில் நான் எவ்வாறு தலையிட முடியும்?" என்றார்.

Jul 24, 202327 min

எதற்கு வெற்றிவாய்ப்பு அதிகம்? எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணிக்கா, பா.ஜ.க.வின் 'பாரத்' கூட்டணிக்கா?| Solratha sollitom-22/07/2023

* புத்தகப்பரிந்துரை* ஓ.டி.டி பரிந்துரை* கூட்டணி அலசல்-Solratha Sollitom

Jul 22, 202324 min