PLAY PODCASTS
Solratha sollitom| Hello Vikatan

Solratha sollitom| Hello Vikatan

346 episodes — Page 3 of 7

சட்டத்தையும் ஜனாதிபதியையும் அவமானப்படுத்துகிறாரா மோடி? | Solratha Sollitom-23/05/2023

* யுபிஎஸ்சி இறுதி தேர்வு 2022 முடிவுகள் வெளியானது. இஷிதா கிஷோர் யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். முதல் 4 இடத்தை பெண்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர். * நாடாளுமன்றக் கட்டடத் திறப்புவிழாவில் புறக்கணிக்கப்படும் குடியரசுத்தலைவர்* எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுகவினர் 30 பேர் மீது ஓபிஸ் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.* நெல்லையில் சரிந்த கேலரி மேற்கூரை* ஸ்டாலினின் இன்பச்சுற்றுலா - எடப்பாடி குற்றச்சாட்டு* ஜனநாயகத்தை காப்பாற்றும் போராட்டம்: ஆதரவு கேட்கும் டில்லி முதல்வர் கெஜ்ரிவால்...* சி.பி.எஸ்.இ பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளில் 10ம் வகுப்பு வரை இனி தமிழ் கட்டாயம் - பள்ளிக்கல்வித்துறைCredits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

May 23, 202322 min

ஸ்டாலின் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் எடப்பாடி, அண்ணாமலை | Solratha Sollitom-22/05/2023

* நாளை முதல் 2000 ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம். இதற்காக வங்கிகளில் தனி கவுண்டர் வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளன. * மூத்த நடிகர் சரத்பாபு காலமானார். * தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, தொடர் மின்வெட்டு, விஷச்சாராய மரணங்கள், அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கம், ரூ.30 ஆயிரம் கோடிக்கு விசாரணை, பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் உள்ளிட்ட ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி. * 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன். 2000 ரூபாய் நோட்டுகளே என்னிடம் இல்லை - அண்ணாமலை* தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடந்த நாள்* 'கேரள ஸ்டோரி' படத்தைப் பார்த்து பாராட்டிய ஆளுநர் ரவி* மலக்குழி மரணங்களைத் தடுக்க ஸ்டாலின் உத்தரவு* அமைச்சர்களை பதவி நீக்க வலியுறுத்தல்! கவர்னரிடம் அண்ணாமலை மனு...* விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்கக் கூடாது என்று ஆதிக்கச்சாதியினர் போராட்டம்.Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

May 22, 202324 min

மின்வெட்டு முதல் 2000 ரூபாய் நோட்டுவரை மோடி-ஸ்டாலின் எதிர்கொள்ளும் சவால்கள்! | Solratha Solitom-20/05/2023

இந்தவார OTT பரிந்துரை: Modern Love chennai, Dahaad இந்தவார புத்தக பரிந்துரை: 'செதுக்கல்கள்'Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

May 20, 202327 min

விஷச்சாராயம், செந்தில் பாலாஜி வழக்கு: ஆளுநரை வைத்து பூச்சாண்டி காட்டும் அண்ணாமலை! | Solratha Sollitom-19/05/2023

* தருமபுரியில் தொடங்கிய ஓபிஎஸ் தரப்பின் ஆலோசனைக் கூட்டம்!* எடப்பாடியில் ஓ.பி.எஸ் அணியின் செயல்வீரர்கள் கூட்டம் அடிதடியில் முடிந்தது. * கோவையில் அண்ணாமலை தலைமையில் பாஜக செயற்குழு கூட்டம்!* விஷச்சாராய விவகாரத்தில் அறிக்கை கோரும் ஆளுநர்... திமுக அரசுக்கு நெருக்கடியா?!* திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு தேதி மாற்றம்! துரைமுருகன் அறிவிப்பு! * ஜல்லிக்கட்டு வழக்கின் வெற்றி: சரத்குமார் அறிக்கை* ஜல்லிக்கட்டு தீர்ப்பு குறித்து அதிமுகவுக்கு தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில்!* சிறார் பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து இணையம் வழியே விற்பனை! சிபிஐ அதிகாரிகளால் கைதான தஞ்சை நபர்!* முழு பலமான 34 நீதிபதிகளை பெற்றது உச்சநீதிமன்றம்! * ஞானவாபி மசூதியில் தடயவியல் பரிசோதனைக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது!Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

May 19, 202325 min

Supreme Court Verdict: ஜல்லிக்கட்டு வெற்றி...உரிமைக்கு மல்லுக்கட்டும் கட்சிகள்! | Solratha Sollitom-18/05/2023

* கர்நாடாகாவின் புதிய முதல்வராகிறார் சித்தராமையா! * டி.கே.சிவகுமாருக்கு துணை முதல்வர் மற்றும் கட்சியின் மாநில தலைமை! * பெங்களூரில் 20 ஆம் தேதி பதவியேற்பு விழா. முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். * ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் அனுமதி! * 'ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொள்கிறோம். நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பில் இருந்த குறைகளை தமிழக அரசின் சட்டத்திருத்தம் சரி செய்துள்ளது.'- உச்சநீதிமன்றம். * ஜல்லிக்கட்டு வழக்கில் அரசமைப்பு சட்டப்பிரிவுகள் மீறப்படவில்லை - உச்ச நீதிமன்றம்! * ஜல்லிக்கட்டு தீர்ப்பு - பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி.! * 'எடப்பாடியார் அழுத்தம் கொடுத்ததே காரணம்!' - விஜய பாஸ்கர் * 'அவராகவே தன்னைத்தானே சல்லிக்கட்டு நாயகன் என்கிறார் ஓ.பி.எஸ்!'- ஜெயக்குமார் * கள்ளச்சாராய விவகாரம், PTR ஆடியோ விவகாரத்தைக் கையில் எடுக்கும் EPS! விசாரிக்க வலியுறுத்தி பேரணியாக கவர்னர் ஆர்.என்.ரவியிடம் மனு அளிக்க அதிமுக முடிவு! * தமிழகத்தில் 10 மாவட்ட கலெக்டர்களுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை. * "நான் 2001-லயே அமைச்சர், எடப்பாடி 2011-லதான் அமைச்சர், அவர் எனக்கு ஜூனியர்!"-ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கடும் விமர்சனம்! * 'சாராய வியாபாரிக்கும் அமைச்சருக்கும் என்ன தொடர்பு?'- செஞ்சி மஸ்தான் மீது புகார் சொல்லும் ஜெயக்குமார்! * காஸ்ட்லி ஆகும் வெளிநாட்டுப் பயணங்கள்... 5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக வரி உயர்வு!Credits : Script & Hosts : & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

May 18, 202319 min

கள்ளச்சாராயம் முதல் மின்வெட்டு வரை... சிக்கித் திணறும் ஸ்டாலின்! | Solratha Sollitom-17/05/2023

* மு.க.ஸ்டாலின் நடத்திய காவல்துறை ஆய்வுக்கூட்டத்தில் கடும் உத்தரவு!*- "நீங்க 2 பேரும் கள்ளச்சாராயம் குடிச்சிட்டு செத்தா ரூ.10 கோடி தறேன்” சீமான் நக்கல் பேச்சு* விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் 4 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை!* மதுவிலக்கு தொடர்பாக 10581 என்ற கட்டணமில்லா எண்ணை மக்கள் தொடர்பு கொள்ளலாம்.* சென்னை அடுத்த இரு நாட்களுக்கு 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்!* தமிழ்நாட்டில் படிப்படியாக முழு மது விலக்கை செயல்படுத்த வேண்டும் - வைகோ வலியுறுத்தல்* தமிழகம் முழுவதும் 3000 மெகாவாட் மின் நுகர்வு அதிகரிப்பு- அமைச்சர் செந்தில் பாலாஜி* சித்தராமையாவுக்கு டிக் அடித்த காங்கிரஸ் தலைமை!*நாளைக்குள் கர்நாடக முதல்வர் யார்? என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்"- காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா * ஒரே நேரத்தில் ஆட்சியராக நியமிக்கபட்ட தம்பதி!* ஜனாதிபதி மாளிகையை இனி, வாரத்தின் 6 நாட்களும் பார்வையிடலாம்!Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

May 17, 202324 min

கள்ளச்சாராய மரணங்களை வைத்து அரசியல் செய்கிறாரா எடப்பாடி? | Solratha Sollitom-16/05/2023

* அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செக். பண மோசடி வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு! * எடப்பாடி மீது பாயும் தேர்தல் பிரமாண வழக்கு!* TASMAC வணிகத்தில் கலால், விற்பனை வரி ஏய்ப்பை சிபிஐ விசாரிக்க வேண்டும்!- அன்புமணி * Karnataka Election: முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கட்சி மேலிடத்திற்கு வழங்கி ஒரு வரி தீர்மானம்!* DK Sivakumar- Sitharamaiah : அடுத்த கர்நாடக முதல்வர் யார்?* "மோசமான பெயருடன் நான் சாக விரும்பவில்லை" - கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்* காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் என் ஆதரவு! - மம்தா அறிவிப்பு* முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் எடப்பாடி! * 'கள்ளச்சாராய மரணங்களில் ஆளுங்கட்சியின் தொடர்பு இருக்கிறது!' - EPS* கள்ளச்சாராய பலியில் எடப்பாடி அரசியல் செய்கிறார்: ஜவஹிருல்லா குற்றச்சாட்டு* 'எடப்பாடியுடன் இணைந்து போராட தயார்!' -திருமா*உச்சநீதிமன்றத்தில் குட்டு வாங்கிய The Kerala Story தயாரிப்பு நிறுவனம்!Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

May 16, 202322 min

கர்நாடகத்தில் மண்ணைக் கவ்விய பா.ஜ.க.வும் கள்ளச்சாராய மரணங்களும் | Solratha sollitom-15/05/2023

* கர்நாடகாவில் பா.ஜ.க தோல்வி* விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த 20-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். * தேதி சொல்லும் சேதிCredits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

May 15, 202325 min

ஸ்டாலின் முதல் ஓ.பி.எஸ் வரை - தடுமாறும் தமிழக அரசியல்! | Solratha Sollitom-13/05/2023

* ஓ.டி.டி பரிந்துரை* புத்தகப்பரிந்துரை* தமிழக அரசியல் அலசல்Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

May 13, 202316 min

ஜெயலலிதாவாகவே மாறி நிற்கும் எடப்பாடி! | Solratha Sollitom-12/05/2023

* தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதல்-அமைச்சரை தொடந்து திமுக எம்.பி. டி.ஆர். பாலுவும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்* கவர்னர் தமிழிசை டெல்லி யூனியன் பிரதேசத்துக்கு வழங்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தாது என கருத்து தெரிவித்துள்ளார். * மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகாரில் 6 பேர் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் 4 பெண் போலீஸ் அதிகாரிகள் இடம்பெற்றதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.* ஜூலை முதல் வாரத்தில் திமுக சொத்துப்பட்டியல் 2ம் பாகம்: அண்ணாமலை...* கடவுளிடம் பேசுவதாகச் சொல்லி 2 கோடி மோசடிCredits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

May 12, 202319 min

அமைச்சரவை மாற்றங்கள் - குற்றச்சாட்டுகளை ஒத்துக்கொள்கிறாரா ஸ்டாலின்? | Solratha Sollitom-11/05/2023

* பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கவனித்த நிதி, மனித வள மேலாண்மைத்துறை தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * நாசரிடமிருந்து பறிக்கப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. * அமைச்சர் மனோ தங்கராஜ் கவனித்த தகவல் தொழில்நுட்பத்துறை பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * தங்கம் தென்னரசுவிடம் இருந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ● தங்கம் தென்னரசு - நிதி, மனிதவள மேம்பாடு ● டி.ஆர்.பி.ராஜா - தொழில்துறை ● சாமிநாதன் - தமிழ் வளர்ச்சி ● பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் - தகவல் தொழில்நுட்பம் ● மனோ தங்கராஜ் - பால்வளத்துறை* பழனிவேல் தியாகராஜனை துறை மாற்றி இருப்பது, நிச்சயமாக அவர் பேசிய ஆடியோ தான் காரணமாக இருக்கும். முதல்-அமைச்சர் ஸ்டாலின் மகனும், மருமகனும் ரூ.30 ஆயிரம் கோடி ஒரே வருடத்தில் குவித்து வைத்திருப்பதாக தியாகராஜன் கூறிய அந்த ஆடியோ உண்மை என்பதை, தற்போது முதலமைச்சரே உறுதி செய்து இருப்பதாகத் தான் இந்த அமைச்சரவை மாற்றம் நமக்கு உணர்த்துகிறது. - ஜெயக்குமார்* . ஜிரோவும் (ஓபிஎஸ்) ஜிரோவும் (டிடிவி தினகரன்) இணைந்தால் ஜீரோ தான். டிடிவி தினகரன் ஓபிஎஸ் சந்திப்பானது காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்ததை போன்ற நிலை தான்டிடிவி தினகரன் ஓபிஎஸ் இணைந்தது மாயமானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்தது போல் தான் உள்ளது. - எடப்பாடி பழனிசாமி* . மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கொள்கை என்பது நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு அங்கம் ஆகும். ஜனநாயக நாட்டில் மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் கைகளிலேயே நிர்வாக அதிகாரம் இருக்க வேண்டும். அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் கையில் கொடுக்கவில்லை என்றால் அது பெரும் சிக்கலை உருவாக்கும். - உச்சநீதிமன்றம்* எந்த முகாந்திரமும் இல்லாமல் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டது தவறு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை முன்னாள் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வரவேற்றுள்ளார்.Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

May 11, 202321 min

அமைச்சரவை மாற்றம்...ஸ்டாலினின் அடுத்த அதிரடி என்ன? | Solratha Sollitom-10/05/2023

* அமைச்சரவையிலிருந்து ஆவடி நாசர் நீக்கம். டி,ஆர்.பி ராஜா சேர்ப்பு. டி.ஆர்.பி. ராஜாவை அமைச்சராக்கும் முடிவுக்கு எதிராக திருவாரூர் மாவட்ட தி.மு.க.வினர் மற்றும் திருவாரூர் எம்.எல்.ஏ. பூண்டி கலைவாணன் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். * தன் தங்கை பூப்பெய்தியதை அறியாமல் கொலை செய்த மும்பை அண்ணன்* தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு * ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., தலைவர் தரணி முருகேசனை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற வழக்கில் அக்கட்சி வழக்கறிஞர் சண்முகநாதனை தனிப்படையினர் கைது செய்தனர்.Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

May 10, 202320 min

பன்னீருடன் இணைந்த தினகரன் - பழனிசாமி ரியாக்‌ஷன் என்ன? | Solratha Sollitom-09/05/2023

* "எங்களுக்கு ரொம்ப பெருமையா இருக்கு.. எந்த உதவி வேணாலும் பண்ண ரெடியா இருக்கோம்"600/600 மதிப்பெண்கள் எடுத்து வரலாற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!* அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு 'யாமறியோம் பராபரமே' என்று துரைமுருகன் பதில்* 'கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு மேற்குவங்கம் தடை. வரிவிலக்கு அளிப்பதாக உ.பி முதல்வர் அறிவிப்பு* நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது கணித தேர்வில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியதாக குற்றச்சாட்டு எழுந்ததையொட்டி 5 பேர் பணியிடை, 34 மாணவர்களும் கணித தேர்வில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.* ராஜஸ்தானில், காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பா.ஜ.க முயற்சி - அசோக் கெலாட் குற்றச்சாட்டு* ஓ.பன்னீர்செல்வம் - தினகரன் சந்திப்பு. இணைந்து செயல்படுவதாக அறிவிப்பு* * "கூடிய விரைவில் சசிகலாவை சந்திப்பேன்" -சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி!Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

May 9, 202325 min

பி.டி.ஆர் பதவி பறிக்கப்படுகிறதா? | Solratha Sollitom - 08/05/2023

* பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று வெளியிட்டார். * மதுரை தி.மு.க பொதுக்கூட்டத்தில் பி.டி.ஆர் பெயர் இல்லை* அமைதி பூங்காவாக திகழும் தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் போலி வீடியோக்களை பதிவிட்டு அமைதியை சீர்குலைப்பதா - உச்சநீதிமன்றம்* சபரீசன் - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு : ஜெயக்குமார் - ஜெய பிரதீப் மோதல்Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

May 8, 202320 min

இரண்டாண்டுகால ஸ்டாலின் ஆட்சி - சாதித்ததும் சறுக்கியதும் | Solratha Sollitom-06/05/2023

* புத்தகப்பரிந்துரை* ஓ.டி.டி பரிந்துரை* திமுக ஆட்சி குறித்த அலசல்Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

May 6, 202335 min

தி.மு.க அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் | Solratha Sollitom-04/05/2023

* திராவிட மாடல் காலாவதியாகிவிட்டது. ஒரே பாரதம் என்பதற்கு எதிரானது திராவிட மாடல். தமிழகம் அமைதிப்பூங்கா இல்லை. பி.டி.ஆர் சொல்வது பொய். தமிழ் மற்றும் ஆங்கிலப்புத்தகங்களுடன் மட்டும் கலைஞர் நூலகம் அமைப்பது பிரிவினைவாத எண்ணம். - ஆளுநர் ரவி* பாலியல் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ.க எம்.பிக்கு எதிராகப் போராடும் மல்யுத்த வீராங்கனைகளிடம் அத்துமீறிய காவல்துறை* மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியினரின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. * பழனிச்சாமி தினந்தோறும் பொய் மூட்டைகளை அவிழ்த்துக்கொண்டு இருக்கிறார். - ஓ.பன்னீர்செல்வம்Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

May 4, 202326 min

காங்கிரசுக்கு எதிராக மோடி எடுக்கும் 'தேசத்துரோகி' ஆயுதம் - பலிக்குமா, கவிழ்க்குமா? | Solratha Sollitom-03/05/2023

* மனோபாலா மரணம்* காங்கிரஸ் கட்சி தேச விரோத சக்திகளுடன் கூட்டணி வைத்து உள்ளது. - கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் மோடி" '40 சதவீதம் கமிஷன் வாங்கும் பா.ஜ.க- - கார்கே சாடல்* ஆர்.கே.. சுரேஷ் வங்கிக்கணக்குகள் முடக்கம்...* "தி கேரளா ஸ்டோரி" திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட்டால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு- அரசுக்கு உளவுத்துறை அறிக்கை* ராகுல் காந்திக்கு மேலும் பின்னடைவு.. தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் ஐகோர்ட் மறுப்பு.Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

May 3, 202321 min

பி.டி.ஆர் ஆடியோ - ஓப்பனாகப் பேசிய ஸ்டாலின்! | Solratha Sollitom-02/05/2023

* காந்தியின் பேரன் அருண் காந்தி மரணமடைந்தார்.* நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் பேரில் வெளியான ஆடியோ குறித்து 'உங்களில் ஒருவன்' கேள்வி - பதில் வீடியோவில் ஸ்டாலின்* தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம், கேரளாவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் கவனம் பெற்றிருக்கிறது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் திரைப்படம் மே 5-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உட்பட பல்வேறு தரப்பினரும் இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.* வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் கல்லேரி கிராமத்தைச் சேர்ந்த பிரசாத், நிதி நிறுவன மோசடியால் தற்கொலை* 'போலி பொதுக்குழுவைக் கலைப்பதாக' ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை* "நான் அறிக்கை விட்டதால்தான் 12மணிநேர வேலை ஆணையை ஸ்டாலின் திரும்பப்பெற்றார்" - எடப்பாடிCredits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

May 2, 202326 min

EPS-Annamalai திடீர் பாசம்...கூட்டணி விரிசலை மறைக்கத்தானா..? | Solratha Sollitom-28/04/2023

* Twitter-ல் வம்பிழுத்த கஸ்தூரி... ரஹ்மான் கொடுத்த Thuglife பதிலடி!* புதுச்சேரி: பெண் ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் 2 மணி நேரம் தாமதமாக வர அனுமதியும்...சர்ச்சையும்!* June 5 சென்னை வரும் President....கிண்டி பன்னோக்கு அரசு மருத்துவமன திறப்பு விழா! * திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் கோட்டம்! * கர்நாடகாவில் தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பை கண்டும் காணாமல் இருந்தாரா அண்ணாமலை?* தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: Twitter-ல் மோதிக் கொண்ட அண்ணாமலை- கனிமொழி! * தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு சர்ச்சை: யார் இந்த கர்நாடகா ஈஸ்வரப்பா? * பிரதமர் மோடியை விமர்சித்ததால் மன்னிப்பு கோரிய காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே! * "எம்.ஜி.ஆர். ஒரு அடி வாங்குனா ரெண்டு அடி குடுப்பாரு; அதே மாதிரிதான் நாங்களும்.." - முஷ்டி முறுக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Apr 28, 202319 min

அமித்ஷாவிடம் அடங்கியது அண்ணாமலையா, எடப்பாடியா? | Solratha Sollitom-27/04/2023

* NCERT நீக்கிய பாடங்களைக் கற்பிக்க கேரள அரசு முடிவு* அதிமுகவிற்கும், அன்னாமலைக்கும் எந்த தகராறும் இல்லை. அதிமுக-பாஜக இடையே பிரிவினையை உண்டாக்க சிலர் முயற்சிக்கின்றனர். பி.டி.ஆர் ஆடியோ குறித்து அமித்ஷாவிடம் கொண்டுசென்றிருக்கிறோம் - எடப்பாடி* தமிழக நிதி அமைச்சர் பேசியதாக கூறப்படும் ஆடியோ குறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வர் பரிந்துரைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.* ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தில் என்ன தவறு?": உயர்நீதிமன்றம் கேள்வி...* அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Apr 27, 202319 min

டெல்லியை மையம் கொள்ளும் ஸ்டாலின், எடப்பாடி! | Solratha Sollitom-26/04/2023

* தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை இரவு டெல்லி பயணம் மேற்கொள்கிறார். நாளை மறுநாள் (28 ஆம் தேதி) ஜனாதிபதியை முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. * அண்ணாமலை கர்நாடகாவில் நுழைய தடை - காங்கிரஸ் கோரிக்கை* ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்துக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு * மதுபான விநியோகம் செய்யும் அரசின் புதிய திருத்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை * வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 119 பேரின் ரத்த மாதிரிகளை சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. * அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார். கோவையில் இருந்து பிற்பகல் 3.20 மணியளவில் டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு 8 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Apr 26, 202320 min

சிரிப்பு எம்.ஜி.ஆரும் கடுப்பு எம்.ஜி.ஆரும் - பழனிசாமி மீது பாயும் பன்னீர்! | Solratha Sollitom-25/04/2023

* “வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேச வேண்டாம்; இந்து - இஸ்லாமியர் பிரச்னை குறித்து பேசி தேர்தலை சந்திப்போம்”- கர்நாடக பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா, கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை * திருவனந்தபுரம் - காசரகோட் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!* “இபிஎஸ், ஓபிஎஸ் இருவருக்கும் எம்.ஜி.ஆர். வேஷம் போட்டு பார்ப்போம்; எது எம்.ஜி.ஆர்-ஐ ஒட்டி வருதுன்னு பாருங்க”- திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பேட்டி * வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக டி.என்.ஏ. சோதனை நடத்த 8 பேர் எதிர்ப்பு* தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் எனும் 55வயது மதிக்கத்தக்க அரசு ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து வெட்டியுள்ளனர். மணல்கொள்ளைதான் காரணமா?* திருச்சி மாநாட்டில் எடப்பாடிக்கு எதிராகப் பொங்கிய பன்னீர்!* 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு* அரசின் நிதானமற்ற கொள்கையால் மக்கள் அவதி: பழனிசாமி...Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Apr 25, 202322 min

தொடர் எதிர்ப்புகளைச் சந்திக்கும் தி.மு.க அரசு! | solratha solittom-24/04/2023

* கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் போட்டியில் இருந்து அதிமுக விலகல்!* பிரபல சினிமா ஆராய்ச்சியாளர் ராண்டார் கை (85) வயது மூப்பு காரணமாக காலமானார்.* திருமண மண்டபங்கள், விளையாட்டுத் திடல்களில், மதுபானம் அருந்த அனுமதியளித்து தமிழக அரசு ஆணை* "ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் சோதனை* பி.டி.ஆர் பேசியதாக வெளியான ஆடியோ சர்ச்சையைக் கிளப்பியது* ஜம்மு காஷ்மீர் அரசு ஊழியர்களுக்கு மருத்துவ இன்சூரன்ஸ் வழங்கியதாகத் தொடரப்பட்ட ஊழல் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சத்தியபால் மாலிக்குக்கு சிபிஐ சம்மன் * 12 மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்தும் சட்ட மசோதா குறித்து விளக்கவும், தொழிற்சங்கத்தினர் கருத்துகளை அறியவும் அரசு சார்பில் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை கூட்டம் * 12 மணி நேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பி வைப்பு..!Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Apr 24, 202320 min

தி.மு.கவை எதிர்க்கும் கூட்டணிக்கட்சிகள் - கம்யூனிஸ்ட்கள் முதல் சிறுத்தைகள் வரை | Solratha Sollitom-21/04/2023

* அதிமுக கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தும் விவகாரம்: "நாகரிகத்தைக் கடைபிடித்து, நீதிமன்ற உத்தரவையும், தேர்தல் ஆணைய உத்தரவையும் பின்பற்றி ஓபிஎஸ் நடந்துகொள்ள வேண்டும்"- சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் இபிஎஸ் பேட்டி* 2023ம் ஆண்டு தொழிற்சாலைகள் திருத்த சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றம்* குஜராத் நரோடா பாட்டியா கிராம படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் உள்பட 67 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். * ஸ்டாலின் முதல் ரஜினி வரை : ப்ளூடிக் நீக்கம்* தி.மு.க.,வினர் சொத்துப்பட்டியல் வெளியிட்ட விவகாரத்தில், மன்னிப்பு கேட்க முடியாது. இழப்பீடும் தர முடியாது. - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டம்* சபாநாயகரைச் சந்தித்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மூன்று கோரிக்கை : சட்டசபை துணைத்தலைவர், பொதுக்கணக்குக்குழு தலைவர், நேரலைCredits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Apr 21, 202318 min

தேர்தல் ஆணையம் அங்கீகரித்த எடப்பாடி... திக்குத் தெரியாத பன்னீர்! | Solratha Sollitom-20/04/2023

* முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச்சிலை நிறுவப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.* அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம். ஜூலை 11 அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்து உள்ளது. கர்நாடகாவில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டு உள்ளது.* அவதூறு வழக்கு மேல்முறையீட்டில் இடைக்காலத் தடை கேட்ட ராகுல் காந்தியின் மனுவை சூரத் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. * கவர்னர் மாளிகையில் புதிய சட்டப்பேரவை கட்ட துரைமுருகன் கோரிக்கை* சட்டசபையில் பழனிசாமி - பன்னீர் மோதல்* கர்நாடகத் தேர்தலில் பாஜகவை எதிர்த்துப் போட்டியிடும் அ.தி.மு.க இரு அணிகள்* உலகின் நம்பர் 1 இந்தியாவின் மக்கள்தொகை.Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Apr 20, 202318 min

அரசியலுக்கு வரும் விஜய்...ஆதரிக்கும் சீமான்! | Solratha Sollitom-19/04/2023

* கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. , சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்றார்.* அசாம் காங்கிரசின் இளைஞரணி தலைவியாக இருப்பவர் அங்கித தத்தா. இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவரான பி.வி. ஸ்ரீனிவாஸ் மீது, பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.* "விஜய் அரசியலுக்கு வரவேண்டும்" - சீமான்* புல்வாமா தாக்குதலில் வெள்ளை அறிக்கை: காங்கிரஸ் வலியுறுத்தல்...Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Apr 19, 202317 min

பழனிசாமிக்கு முட்டுக்கட்டை போட்டும் பன்னீர் - என்ன முடிவெடுக்கும் தேர்தல் ஆணையம்? | சொல்றத சொல்லிட்டோம் - 18/04/2023

* ஹைதராபாத்தில் கிரிக்கெட் சூதாட்டம்* தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பயணித்த ஹெலிகாப்டரில் கார்நாடக தேர்தல் அதிகாரிகள் சோதனை * ஓ.பன்னீர்செல்வம் இன்று தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் தான் நீடிப்பதாகவும், தனது பதவி காலாவதியாகவில்லை என்றும் எனவே எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.* கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இளைய பெருமாள் நூற்றாண்டு நினைவு அரங்கம் அமைக்கப்படும் என பேரவையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். * * தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா தொடர்பாக 2வது முறையாக விளக்கம் கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்- சட்டப்பேரவையில் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்* ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் Multi Tasking Staff (MTS) தேர்வு, CHSLE தேர்வு ஆகியவை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவிப்பு* OBC இடஒதுக்கீடு குறித்து விளக்கம் கேட்ட செய்தியாளரை ஒருமையில் பேசி, வாக்குவாதத்தில் ஈடுபட்ட சீமான்!*சென்னையில் உள்ள மசூதியை அகற்றக்கோரி வழக்கு தொடர்ந்த திருப்பூர் வக்கீலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்* திருவள்ளூர்: பென்னாலூர்பேட்டையில் பள்ளிக்கு செல்லாத மாணவர்களை அழைத்து சென்று தேர்வெழுத வைத்த உதவி காவல் ஆய்வாளர் பரமசிவம்!* அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 20 ஆம் தேதி, கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Apr 18, 202321 min

அண்ணாமலையை எதிர்க்கும் அ.தி.மு.க.வும் தி.மு.கவும்.... | Solratha Sollitom-17/04/2023

* தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளின் தொகுப்பினை செவித்திறன் பாதிக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், சைகை மொழியில் 10 நிமிடங்கள் ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!* 500 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ்* 500 கோடியே 1 ரூபாய் கேட்டு அண்ணாமலை ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ்* அண்ணாமலையைக் கலாய்த்த எடப்பாடி, ஜெயக்குமார், அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் * மாணவிகள் திருப்தி அடையாததால் விசாரணைக் குழுவை நீதிமன்றமே அமைக்கலாமா என்பது குறித்தும் கலாஷேத்ரா பதில் தர நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. * பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக காவல் துறையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது* டெல்லி மதுபானக்கொள்கை ஊழல் வழக்கு: சிபிஐ முன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர். சுமார் 9 மணி நேரம் கெஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது. * பாஜகவில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். * புல்வாமாவில் கடந்த 2019-ம் ஆண்டு 40 வீரர்களை பலி கொண்ட தாக்குதல் நடந்தபோது அந்த மாநில கவர்னராக இருந்த சத்யபால் மாலிக் சமீபத்தில் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீரர்கள் பயணம் செய்ய விமானம் கேட்டதாகவும், ஆனால் மத்திய அரசு மறுத்ததாகவும் அவர் தெரிவித்தார். சாலை வழியாக பயணம் செய்ததால்தான் இந்த சம்பவம் அரங்கேறியதாகவும் அவர் கூறினார்.* அமித்ஷா கலந்துகொண்ட கூட்டத்தில் வெயிலின் கொடுமை தாங்காமல் 11 பேர் உயிரிழந்துவிட்டனர். * உத்தரப் பிரதேசத்தில் பிரபல ரவுடியும் முன்னாள் எம்பியுமான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரன் அஷ்ரப் அகமதுவை 3 பேர் கொண்ட கும்பல் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Apr 17, 202324 min

அண்ணாமலை - அம்பலப்படுத்தினாரா, அசிங்கப்பட்டாரா? | Solratha Sollitom-15/04/2023

* புத்தகப்பரிந்துரை* ஓ.டி.டி பரிந்துரை* தி.மு.க.வின் ஊழல் பட்டியல் குறித்த அண்ணாமலை பிரஸ்மீட் - ஓர் அலசல்Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Apr 15, 202331 min

DMK Files VS Annamalai Files | மோசடி புகாரில் சிக்கி, தி.மு.க ஊழல் புகாரை வெளியிடும் அண்ணாமலை! | Solratha Sollitom-13/04/2023

DMK Files VS Annamalai Filesமோசடி புகாரில் சிக்கி, தி.மு.க ஊழல் புகாரை வெளியிடும் அண்ணாமலை!Description : * தி.மு.க.வின் ஊழல் பட்டியலை நாளை வெளியிடப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு* 'பணம் உள்ளவர்களுக்குத்தான் பா.ஜ.க.வில் பொறுப்பு' - பா.ஜ.க.வில் இருந்து விலகிய பொருளாதாரப் பிரிவு மாநிலச்செயலாளர் எம்.ஆர்.கிருஷ்ணபிரபு குற்றச்சாட்டு* மெரினா லூப் சாலையில் மீன்கடைகள் அகற்றம் - மீனவர்கள் எதிர்ப்பு* தமிழ் மொழியைவிட இந்தி பழமையான மொழி கிடையாது. தமிழின் மீது இந்தியைத் திணிக்க முடியாது - ஆளுநர் ஆர்.என்.ரவி* "சசிகலாவின் தூண்டுதலின்பேரில் அவரின் ஆதரவாளர்கள் 500 பேர் என்னைத் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கின்றனர். " என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ரோசனை காவல் நிலையத்தில் இன்று மதியம் புகார் அளித்துள்ளார்.* "சட்டசபையில் அமித்ஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதில் எந்த தவறும் இல்லை" - ஸ்டாலின்* சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததாக 24 பேரை போலீசார் கைதுசெய்தனர்.Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Apr 13, 202322 min

எடப்பாடி பழனிசாமியை இருட்டடிப்பு செய்கிறதா ஸ்டாலின் அரசு? | Solratha Sollitom-12/04/2023

* ஓ.பன்னீர்செல்வம் வழக்கு ஏப்ரல் 20, 21-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை நடத்தப்படும் என்றும் வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் இல்லை எனவும் தேவைப்பட்டால் ஏப்.24-ந் தேதியும் இறுதி விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். * நேர்த்தியாக மரணத்தை எதிர்கொண்ட தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் யெபுரி ஹர்ஷவர்த்தனன் * 'நேரலையில் ஒளிபரப்பாமல் இருட்டடிப்பு' - எடப்பாடி குற்றச்சாட்டு* டெல்லி ஐகோர்ட், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை குறித்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. * கடலூரில் பாலியல் புகாரில் சிக்கியதால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் பக்கிரிசாமி கைது செய்யப்பட்டுள்ளார். * * அம்பேத்கர் சிலைக்கு காவி உடை, விபூதி, குங்குமம் போன்றவற்றை அணிவிக்கமாட்டோம்" என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம்* அதிமுக கொடியை ஏற்ற சிரமப்பட்டு தவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!* சட்டப்பேரவையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள LED திரையில் தன்னுடைய படத்தை பார்த்ததும் குஷியான அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்* ஆருத்ரா மோசடியில் கைதான ஹரிஷ், பாஜகவில் பதவி பெற லஞ்சம் கொடுத்ததாகத் தகவல்Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Apr 12, 202320 min

ஐ.பி.எல் விவகாரம் - களமிறங்கிய அன்புமணி, வேலுமணி, உதயநிதி | Solratha Sollitom-11/04/2023

* பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை ஏப்ரல் 12-க்கு டெல்லி ஐகோர்ட் ஒத்திவைத்தது.* ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி* சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் தேவை என எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார். * நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட் ரசிகர்களுக்கு கிடைக்காமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. * தமிழகத்தில் திறமையான வீரர்கள் இருந்தும் ஒருவரை கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யவில்லை எனவும் தமிழர்களே இல்லாமல் தமிழக அணி என்பது போல விளம்பரம் செய்து நம் மக்களிடம் லாபம் அடைகின்றனர். எனவே தமிழர்கள் இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு வீரர்கள் இடம்பெறாத சிஎஸ்கே அணி விளையாட தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை வைத்துள்ளார்.* தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் - குரூப் கேப்டனை டிஸ்மிஸ் செய்து ராணுவ நீதிமன்றம் உத்தரவு* ஆன்லைன் சூதாட்ட தடையை அமல்படுத்தும் பணி தீவிரம்* “பசு கோமியத்தை மனிதர்கள் குடிப்பது உடல் நலத்திற்கு உகந்தது அல்ல..” -இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தகவல்* “தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பரவல் எண்ணிக்கை. அதிகரித்தால், பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும்” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்* உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, 3 மசோதாக்களுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை ஒப்புதல்Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Apr 11, 202318 min

கொந்தளித்த சட்டசபை - மசோதா ஒப்புதல் - அடங்கினாரா ஆளுநர்? | Solratha Sollitom-10/04/2023

* மோடியின் தமிழ்நாடு வருகை* ஆளுநருக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டசபையில் தனித்தீர்மானம்* வகுப்புவாத சக்திகளுக்கு ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார்.ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்க வேண்டும். - மு.க.ஸ்டாலின்* தமிழ்நாடு அரசு அளித்த நிதியில் கவர்னர் மாளிகை விதிமுறை மீறல். இனி கூடுதல் நிதி தரப்படாது - தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன்* ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆர்.என்.ரவி ஒப்புதல்Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Apr 10, 202325 min

பாஜக-வின் தமிழ்நாட்டை ஆளும் கனவு பலிக்குமா? | Solratha Sollitom - 08/04/2023

* புத்தகப்பரிந்துரை* ஓ.டி.டி பரிந்துரை*#BJPSthapnaDiwas:தமிழ்நாட்டில் பாஜகவின் உண்மை நிலை!Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Apr 8, 202323 min

'உளறல் நாயகன்' ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வலுக்கும் எதிர்ப்பு! | Solratha Sollitom-07/04/2023

* ஆளுநருக்கு முட்டுக் கொடுக்கும் ADMK... எதிர்க்கும் திமுக கூட்டணிக் கட்சிகள்..!* ஆளுநருக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்த சீமான்! * ஆளுநரின் கருத்து பற்றிய கேள்விக்கு, ‘பதில் சொல்ல விரும்பவில்லை’ என ஓ.பி.எஸ். பதில்.* தமிழ்நாடு வரும் மோடிக்கு கருப்பு கொடி காட்ட காங்கிரஸ் திட்டம்!* "உலக தலைவராக உள்ள பிரதமர் மோடி அந்நிய நாட்டு பணம் இந்தியாவுக்குள் வர அனுமதிக்க மாட்டார்"- அப்பாவியாய் கருத்து சொன்ன அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி!* அம்பாசமுத்திரம் பகுதி காவல் நிலையங்களில் கைதிகள் துன்புறுத்தல் புகார். ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா விசாரணை நடத்திட அரசு உத்தரவு!*"சென்னை வரும் பிரதமரை சந்திக்க எனக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை!" -ஓ.பன்னீர்செல்வம்!*"எடப்பாடி பழனிசாமியை ஒரு பொருட்டாகவோ, எங்களுக்கு போட்டியாகவோ கருதவில்லை”- கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவை சந்தித்த பின்பு ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி*"எம்.ஜி.ஆர்-ஐ இதைவிட மோசமாக யாராலும் கேலி செய்ய முடியாது" - பண்ருட்டி ராமச்சந்திரன்*சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விட வழக்கறிஞரை நியமித்தது கர்நாடக அரசு*ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஏப்ரல் 12ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு*தமிழ்நாட்டைப் பாராட்டிய ஜிதேந்திர சிங்!*மோடியின் தமிழ்நாடு விசிட்!Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Apr 7, 202326 min

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகளைக் கொச்சைப்படுத்துகிறாரா ஆளுநர் ரவி? | Solratha Sollitom - 06/04/2023

* சுப்ரீம் கோர்ட்டு 14 எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தது.* சபாநாயகர் அப்பாவுவைப் புகழ்ந்த ஓ.பன்னீர்செல்வம்* புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய போலி வீடியோ வழக்கில் பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் நீதிமன்றத்தில் திங்கள்கிழமைக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. .* "நானும் கலாஷேத்ரா கல்லூரியில் படித்தவள்தான். . இந்த விவகாரத்தில் கலாஷேத்ரா மாணவிகள் பலி ஆடுகளாக ஆக்கப்படுகிறனர். "ஹரிபத்மன் மிகவும் சிறந்த ஆசிரியர்" - அபிராமி ஐயர்* தாஜ்மகால் மற்றும் குதுப்மினாரை இடிக்க வேண்டும் என்று அசாம் மாநில பாஜக எம்.எல்.ஏ. ரூப்ஜோதி குர்மி தெரிவித்துள்ளார். முகலாய மன்னர்களால் உருவாக்கப்பட்டவை என்ற ஒரே காரணத்துக்காக இந்தியாவின் இந்த இரண்டு முக்கிய நினைவுச் சின்னங்களையும் இடிக்க வேண்டும் என்று மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.* "கூடங்குளம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆளுநர் ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் அதற்கு நிராகரிப்பதாக பொருள்" - ஆளுநர் ரவிCredits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Apr 6, 202319 min

தி.மு.க முதல் அ.தி.மு.க வரை - மோடி அரசுக்கு எதிராகத் திரளும் கட்சிகள்! | Solratha Sollitom-05/04/2023

* அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கைது* சென்னையில் தாம்பரம் அருகே உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கிப் பலி. * நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக சட்டசபையில் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. * அமித்ஷாவுடன் தம்பிதுரை சந்திப்பு...* கேரள ரயிலில் தீ வைத்தவர் கைது* கேரளாவின் மீடியாஒன் டிவி சேனல் ஒளிபரப்பை ஒன்றிய அரசு தடை செய்த நிலையில், அந்த தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததுCredits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Apr 5, 202320 min

'கூட்டணியை உடைப்பது அ.தி.மு.கதான்' - குற்றம் சாட்டும் அண்ணாமலை! | Solratha Sollitom-04/04/2023

* தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. * அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து * அருணாச்சலப் பிரதேச விஷயத்தில் இந்தியாவை சீண்டும் வகையில், சீனா அம்மாநிலத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை "திபெத்தின் தெற்குப் பகுதியான ஜங்னான்" என்று பெயரிட்டு வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது.இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டில் "2000 சதுர கி.மீ நிலத்தை அபகரித்ததோடு, அப்பகுதியின் பெயர்களை மாற்றி வரும் சீனாவின் அத்துமீறல் குறித்தும் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?" "பிரதமருக்கு ஏன் இந்த அதீத பயம்?"* ட்விட்டரில் பறவைக்குப் பதில் நாய்* சமூகநீதி மாநாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்திய ஸ்டாலின்Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Apr 4, 202325 min

அ.தி.மு.க கூட்டணி - அண்ணாமலையைப் புறக்கணிக்கும் டெல்லி! | Solratha Sollitom-03/04/2023

* அதிமுக கூட்டணி பற்றி அண்ணாமலை, எல்.முருகன் மாறுபட்ட கருத்துகள்* ''கூட்டணியில் எத்தனை சீட்டுகள் என்று அதிமுகவே முடிவெடுக்கும்" - ஜெயக்குமார்"கூட்டணியைக் குறித்து மத்தியில் உள்ள தலைவர்கள்தான் முடிவு செய்வார்கள், பா.ஜ.க மாநிலத்தலைவர் அல்ல" - எடப்பாடி* குஜராத் - இஸ்லாமியப் பெண்கள் பாலியல் வன்முறை வழக்கில் 26 பேர் விடுதலை* சென்னை தாம்பரத்தில் பெண்ணை கிண்டல் செய்த ரெயில்வே பாதுகாப்பு படை சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் நாயர் சஸ்பெண்ட் * ராம நவமியை முன்னிட்டு பீஹார், மேற்குவங்கம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வன்முறை து.* பன்னீர்செல்வம் மேல்முறையீடு வழக்கு: ஏப்.20க்கு ஒத்திவைப்பு...'தற்போதைய நிலையில் எதையும் முடிவு செய்யமுடியாது. இடைக்கால நிவாரணம் இல்லை' - சென்னை உயர்நீதிமன்றம்* பாலியல் புகாருக்கு ஆளான கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் கைது* கேரளா மாநிலம் ஆலப்புழா-கண்ணூர் விரைவு ரெயிலில் மர்ம நபர் ஒருவர் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Apr 3, 202322 min

ஏப்ரல் 1 - ஏமாந்தது யார், ஏமாற்றுவது யார்?

* புத்தகப் பரிந்துரை* ஓடிடி பரிந்துரை* ஏப்ரல் 1 தினமும் அரசியல்வாதிகளும்Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Lenin | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Apr 1, 202324 min

இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் வழக்குகள் : இதுக்கு இல்லையா சார் ஒரு என்டு? | Solratha Sollitom-31/03/2023

* அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்பிரமணியன்* ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு வழக்கு* ரோகிணி திரையரங்கில் மறுக்கப்பட்ட நரிக்குறவர்* கார்த்தி சிதம்பரம் கோபம்* சாத்தான்குளம், பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம், கலாஷேத்ரா பாலியல் புகார்கள், கொடநாடு கொலை, கொள்ளை - சி.பி.சி.ஐ.டி விசாரணைCredits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Mar 31, 202328 min

மீண்டு(ம்) வருவாரா ராகுல் காந்தி? | Solratha Sollitom-29/03/2023

* கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு!* வயநாடு இடைத்தேர்தல் ஏன் தற்போது நடைபெறாது?- தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்!*கார்த்தி சிதம்பரத்தை வெறுப்பேற்றி புறக்கணித்தாரா ராகுல் காந்தி?*நாடுமுழுவதும் போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!*UPI பணபரிவர்த்தனைக்கு கட்டணம் நிர்ணயித்த தேசிய பர்வர்த்தனை கழகம்!* தயிர்பாக்கெட்டிலும் இந்தித்திணிப்பு செய்யும் பாஜக!*வேங்கைவயல் விவகாரத்தை விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் தனிநபர் ஆணையம்!- Chennai High Court* ஏ.எஸ்.பி பல்வீர் சிங் IPS சஸ்பெண்ட்!- சட்டசபையில் அறிவித்த Stalin!*சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு; எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க கோரிக்கை!*நெஞ்சு ஈரமாகும் படி Sentiment பேச்சால் சட்டசபையை நெளிய விட்ட Minister Duraimurugan! *நாளை விசாரணைக்கு வருகிறது OPS தரப்பின் 'அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்த மேல்முறையீட்டு மனு'!Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Mar 29, 202325 min

பழனிசாமிக்கு வெற்றி - பன்னீர்செல்வம் இனி என்ன செய்வார்? | Solratha Sollitom-28/03/2023

* அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான ஓ.பன்னீர் செல்வம் தரப்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.* உத்தரபிரதேசத்தில் போலீஸிடம் மோசடி செய்த பா.ஜ.க நிர்வாகி* அரசு பங்காளாவை காலி செய்ய சம்மதித்தார் ராகுல்...* மக்கள் பணத்தை மோசடி செய்தவர்களை பாஜ தலைமை ஏன் கட்சியில் சேர்க்கிறது. மோசடி குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட ஹரிஷ் என்பவருக்கும், தமிழக பாஜக தலைமைக்கும் உள்ள உறவு குறித்து அண்ணாமலை விளக்க வேண்டும். - கே.எஸ்.அழகிரி* மன்னிப்பு கேட்ட முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன்* ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக ஆர்ப்பாட்டம்* விசாரணைக்கைதிகளின் பற்களைப் பிடுங்கிய சம்பவம் தொடர்பாக பத்திரிக்கைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி பாஸ்கரன் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்தார்.Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Sai.M| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Mar 28, 202320 min

ஸ்டாலின் விளக்கம் - இன்னும் குழப்பம் தீராத மகளிர் உரிமைத்தொகை! | Solratha sollitom-27/03/2023

* பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வானதி சீனிவாசனும் கறுப்புடையில் வந்தார்.* சட்டசபையில் ஸ்டாலின் : குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இந்த திட்டம் யாருக்குப் பயனளிக்கும் என்பது பொதுமக்களுக்கே தெரியும். * விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய அம்பை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் மீது நடவடிக்கை* உத்திரப்பிரதேசத்தில் நரபலிக்கொடுமை.* டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வில் காரைக்குடியில் ஒரு தேர்வு மையத்தில் எழுதிய அத்தனைபேரும் தேர்ச்சி* காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ராகுல் காந்தியால் கொண்டுவரப்பட்ட சட்டம் இன்று அவரையே பாதித்துள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். * * தனக்குத்தானே சட்டையில் தீவைத்துக்கொண்டு பாஜ நிர்வாகிகள் மீது புகார் கொடுத்த அக்கட்சியை சேர்ந்த பேக்கரி சூபர்வைசர் கைது செய்யப்பட்டார். * பாஜக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி பங்கேற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Mar 27, 202322 min

ராகுல் முதல் கெஜ்ரிவால் வரை - எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கிறதா மோடி அரசு? | Solratha Sollitom - 25/03/2023

* புத்தகப்பரிந்துரை* ஓ.டி.டி பரிந்துரை* எதிர்க்கட்சிகளும் மத்திய அரசும்Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Mar 25, 202318 min

மீண்டும் மோதும் அ.தி.மு.க - பா.ஜ.க | Solratha Sollitom-24/03/2023

* எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்து உள்ளது.* என்.எல்.சி நில எடுப்பு விவகாரம் தொடர்பாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்* சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக ண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதை எதிர்த்து 14 அரசியல் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளன. * ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் பாஜக நிர்வாகி ஹரீஷ் * திமுக - அதிமுக இடையேதான் போட்டி - கே.பி.முனுசாமி * தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்ற நம்பிக்கை மக்களிடம் வந்துவிட்டது. பாஜகவினர் கூனி குறுகி வாக்கு கேட்க வேண்டிய நிலை எங்கும் இல்லை. - அண்ணாமலைCredits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Mar 24, 202325 min

மீண்டும் சிக்கலில் சிக்கும் ராகுல்! | Solratha Sollitom-23/03/2023

* கிருஷ்ணகிரி ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக ஸ்டாலின் விளக்கத்துக்கு எடப்பாடி எதிர்ப்பு* ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் தாக்கல் செய்தார். * சட்டசபையில் மோதிக்கொண்ட அதிமுகவினர்* கவர்னர் ரவி டில்லி பயணம்...* ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு* ராகுலை விசாரிப்பதுபோல் அமித்ஷாவை விசாரிப்பார்களா? பொதுக்கூட்டம் ஒன்றில் மேகாலயாவில் ஊழல் நடப்பதாக அமித்ஷா தெரிவித்திருந்தாரே? - காங்கிரஸ்* டெல்லியில் எனக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்களை கைது செய்ய கூடாது - அர்விந்த் கெஜ்ரிவால்* டெல்லி, பீகார், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு புதிய தலைவர்களை நியமித்து அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார்.* கூட்டணிக்கட்சியினரின் விமர்சனம் நல்லதுதான். அவர்கள் பா.ஜ.க. வளர்வதை ரசிக்கவில்லை. கூட்டணிக்கட்சியாக இருந்தாலும் பா.ஜ.க வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் முட்டாள்கள். அதேபோல் பாஜக தலைவராக இருந்துகொண்டு மற்ற கட்சி வளர வேண்டும் என்று நினைத்தான் நான் முட்டாள் - அண்ணாமலைCredits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Mar 23, 202326 min

பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடப் போகிறாரா ஓ.பி.எஸ்? | Solratha Sollitom -22/03/2023

* பெண்களை இழிவுபடுத்தியதாக Voice of savukku shankar அட்மின் பிரதீப் என்பவர் கைது. சவுக்கு சங்கர், அண்ணாமலை, குஷ்பு போன்றவர்கள் கண்டனம்* கவுடா சகோதரர்கள் என மருது சகோதரர்களைக் காட்டும் கர்நாடக பாஜக* அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட தயார் - ஓபிஎஸ் தரப்பு வாதம் * ஓ.பன்னீர்செல்வம் நடத்துவது தனிக்கட்சி - எடப்பாடி தரப்பு* கிருஷ்ணகிரியில் காதல் திருமணத்துக்கு எதிராகக் கொலை* ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான மசோதா நாளை சட்டமன்றத்தில் மீண்டும் தாக்கல்Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Mar 22, 202322 min

ஆளுநர் ரவிக்கு ஆப்பு வைத்த மோடி அரசு! | Solratha Sollitom-21/03/2023

* வேளாண் பட்ஜெட் முக்கிய அம்சங்கள்* கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் பத்ம லட்சுமி* புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி வீடியோ வெளியிட்ட டெல்லி பா.ஜ.க. நிர்வாகி பிரசாந்த் உம்ராவுக்கு கடும் நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. * கன்னட திரையுலகை சேர்ந்த நடிகர் சேத்தன் குமார் அகிம்சா. இந்துத்துவாவை ட்விட்டரில் விமர்சித்ததால் கைது* புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரத்தில் விசாரணையை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்திருக்கிறது.* டெல்லியில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படவிருந்தது. இதை அந்த மாநில நிதியமைச்சர் கைலாஷ் கெலாட் தாக்கல் செய்யவிருந்தார். இந்த நிலையில், நேற்று மாலை, மத்திய அரசு டெல்லி பட்ஜெட்டை நிறுத்திவைத்திருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியிருக்கிறார்.* ஆன்லைன் சூதாட்டத்தை மாநில அரசுகளே தடை செய்யலாம் - மத்திய அரசுCredits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Mar 21, 202325 min

'தகுதியுள்ள' மகளிருக்குத்தான் உரிமைத்தொகை - சர்ச்சைக்குள்ளான தமிழக பட்ஜெட் | Solratha Sollitom-20/03/2023

* பட்ஜெட் அம்சங்கள்* அ.தி,.மு.க பொதுச்செயலாளருக்கான தேர்தல் நடத்தலாம். ஆனால் முடிவை வெளியிடக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு* "கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை" - அண்ணாமலைCredits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed

Mar 20, 202325 min